புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள தெரசா மே (Theresa May) வின் பெயரும், பிரிட்டன் நாட்டின் பிரபல மாடலும், ஆபாசப் படங்களில் நடித்து வரும் டெரசா மே (Teresa May)வின் பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால், பலரும் ஆபாச நடிகைதான் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கவுள்ளதாக நினைத்து உலகில் உள்ள பலர் அவருக்கு பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை அனுப்பி வருகின்றனர். 

ஒருநாளும் இல்லாத திருநாளாக இப்படி திடீரென குவிந்துவரும் வாழ்த்து மழையில் குளித்துவரும் டெரசா மே ஆனந்தத்தில் திக்குமுக்காடிப்போய் உள்ளார்.


பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள தெரசா மே-ன் பெயர் ஆங்கிலத்தில் எழுதும்போது, Theresa May என்றும், ஆபாச நடிகை தனது பெயரை Teresa May எனவும் எழுதி வருகின்றனர். இந்த 'H' என்ற ஒரு எழுத்தால் தான் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் குவியும் வாழ்த்துகளை கண்டு வியந்துவரும் டெரசா மே, ‘நான் அவளில்லைபாணியில் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்வதுடன், பிரதமராக பதவியேற்கவுள்ளது வேறொரு தெரசா மே என்று விளக்கமும் அளித்து வருகிறார்.