வடக்கின் விவசாயத்திற்கு ராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் -யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி 

Published By: Digital Desk 4

31 Aug, 2020 | 05:21 PM
image

வடக்கு மாகாண விவசாயத்திற்கு ராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள மாவட்ட இராணுவ கட்டளைத் தளதி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் ராணுவத்தினரால் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சமூக நலநோம்பு திட்டங்கள் பொதுமக்களுக்காக  முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அத்தோடு ராணுவத்தினரால் பிரதானமாக பாதுகாப்பு நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கினை பொறுத்தவரை வடக்கு ஒரு விவசாய பூமி தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கமும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக அறிவித்திருக்கின்றது.

அதேபோலவே ராணுவத்தினர் ஆகிய நாங்களும் விவசாயிகளுக்கு உதவுவதற்கு தயாராகவிருக்கின்றோம் எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான சகல விதமான உதவிதிட்டங்களையும் நாங்க வழங்கத் தயாராகவுள்ளோம்.

இன்று  வட்டுக்கோட்டையில் விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் ஒரு குளத்தினை புனரமைப்பு செய்வதற்கான வேலைத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம் இதுபோல வடக்கில் எதிர்வரும் காலங்களில் விவசாய பெருமக்களுக்கான உதவிகளை ராணுவத்தினர் முன்னெடுப்பவர்கள் எனவும்  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21