நடவடிக்கைகள் மிக முக்கியம்..!: இலங்கையை வலியுறுத்தும் அமெரிக்கா

Published By: J.G.Stephan

31 Aug, 2020 | 04:35 PM
image

(நா.தனுஜா)
காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான பதிலைப் பெற்றுக்கொடுப்பதற்கு காணாமல்போனோர்  பற்றிய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவையாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் அமெரிக்கா, அத்தகைய கட்டமைப்புக்களை வலுப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச காணாமல்போனோர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் காணாமல்போனோரின் உறவினர்களுடனான தமது ஒருமைப்பாட்டை இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றிலேயே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

வலிந்து காணாமலாக்கப்படும் சம்பவங்களை முடிவிற்குக் கொண்டு வருவது மாத்திரம் போதுமானதல்ல. மாறாக தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகக் காத்திருக்கும் குடும்பங்களுக்குப் பதில் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அமெரிக்கத்தூதுவர், இந்தக் குடும்பங்களை முன்நிறுத்தி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தற்போதும் எதிர்காலத்திலும் மிகவும் முக்கியமானவையாகும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதேவேளை, காணாமல்போனோரின் அறியப்படாத தலைவிதியை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதற்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும் என்று இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ரன்ஜா கொக்ரிஜ்ப் வலியுறுத்தியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04