விக்னேஸ்வரனின் கருத்தை நீக்குமாறு கோர எவருக்கும் உரிமை கிடையாது : வாசுதேவ

Published By: J.G.Stephan

31 Aug, 2020 | 03:28 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

விக்னேஸ்வரனின் கருத்துக்களை பாராளுமன்ற ஹென்சாடில் இருந்து நீக்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதற்காக அவரது  நிலைப்பாட்டுக்கு இணங்கவேண்டிய தேவையும் இல்லை என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.



அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் மக்களின்  பூர்வீகம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. அதனை தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கின்றது. அதனை பாராளுமன்றத்தில் தடுத்து நிறுத்த யாருக்கும் முடியாது.  சபாநாயகரும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் பாராளுமன்ற ஹென்சாட் அறிக்கையில் பதிவாகி இருக்கின்றது. அதனை அதிலிருந்து நீங்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களது நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் தெரிவிக்கும் உரிமை இருக்கின்றது. அதனடிப்படையிலே சபாநாயகர் அவர் தெரிவித்த கருத்துக்களை மறுக்கவில்லை.

அத்துடன் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு அனைவரும் இணங்கவேண்டும் என்றில்லை என அவர்  மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04