சபரிமலை கோவிலுக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் வெளியான முக்கியத் தகவல்...!

Published By: J.G.Stephan

31 Aug, 2020 | 01:11 PM
image

வருடா வருடம் கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டு சபரிமலை ஐயனை தரிசிக்க செல்வது வழக்கம். அந்த வகையில், இவ்வருடம் கொரோனா பரவலில் இந்தியா பாரிய சவால்களை சந்தித்து வருகிறது. 

இருப்பினும்,  சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் முதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் நவம்பர் மாதத்தில் இருந்து விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான சங்கம் தெரிவித்துள்ளது. ஓணம் பண்டிகை மற்றும் உத்தராடம், திருவோண சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

அத்தோடு, செப்டெம்பர்  2ஆம் திகதி வரை பக்தர்கள் தரிசனமின்றி வழக்கமான பூஜைகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 16 இல் ஆரம்பமாகும் மண்டல பூஜைக்காலம் முதல் சபரிமலையில் விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்திருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சபரிமலை கோயிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல் இருந்தது. தற்போது நவம்பர் 16 ஆம் திகதிக்கு மேல் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59