ஐ.தே.க வின் புதிய தலைமைத்துவத்துடன் இணைந்து செயற்பட தயார்: ஐக்கிய மக்கள் சக்தி

Published By: J.G.Stephan

30 Aug, 2020 | 01:33 PM
image

(செ.தேன்மொழி)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டாலும் , அவர் சிறந்த முறையில் செயற்படுவாராயின் அவர்களுடன் கூட்டணி அமைத்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்ட்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார். 



மேலும், ஐ.தே.க.வில் எஞ்சியுள்ள சில உறுப்பினர்களை தங்களுடன் இணைந்துக் கொள்ளவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைவதற்கு வாய்ப்பை வழங்கிய பொறுப்பை  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவமே ஏற்கவேண்டும்.  கட்சிக்குள் செய்ய வேண்டியிருந்த மாற்றங்களை உரிய காலத்தில் செய்யாததன் விளைவாகவே நாங்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

அத்தோடு, பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வில் இணைந்து போட்டியிட்டிருந்தோம் என்றால் அரசாங்கத்திற்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருக்கும். நாங்கள் தனித்து போட்டியிட்டதன் காரணமாகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவடைந்துள்ளது. நாங்கள் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பொறுப்பை அப்போது கட்சியின் பிரதி தலைவராக செயற்பட்ட சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி வந்தும் , அது தொடர்பில் கட்சியின் தலைவர் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அதனாலேயே சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியுள்ளோம்.

ஐ.தே.க.வினால் ஒரு ஆசனங்களை கூட வெற்றிக் கொள்ள முடியாமல் போயுள்ளமை தொடர்பில் எமக்கு கவலையளிக்கின்றது என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30