அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி ஆவதற்கு கமலா ஹாரிஸிற்கு தகுதியில்லை..!: விமர்சிக்கிறார் ட்ரம்ப்

Published By: J.G.Stephan

30 Aug, 2020 | 12:40 PM
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியை காண தான் ஆவலாக உள்ளதாகவும் ஆனால் அதற்கு தகுதிவாய்ந்த வேட்பாளர் கமலா ஹாரிஸ் இல்லை என ஜனாதிபதி டர்ம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்வுள்ளது. இதற்கான அந்நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டும் கொரோனாவுக்கு மத்தியிலும் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியும் ஜனாதிபதி ட்ரம்புக்கும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஜனநாயக கட்சியின் முதல் முறையாக துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய மற்றும் ஜமைக்கா வம்சாவளியை சேர்ந்தவரான கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் கூட்டணியை ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகின்றமை பெரிதும் ஊடகங்கள் வாயிலாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,  அங்கு நடைபெற்ற குடியரசு கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி நான் பார்க்க விரும்புகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் கமலா ஹாரிஸ் அந்த நிலைக்கு வருவதைப் பார்க்க நான் விரும்பவில்லை, அவருக்கு அத்தகைய திறமைகள் இல்லை எனவும், அதற்கான தகுதி இவாங்காவிடம் இருப்பதாகவும் அவர் ஜனாதிபதியாக வேண்டும் என பலரும் விரும்புவதாக டர்ம்ப் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17