கொரோனாவின் தாக்கம் ; திருப்பதி தேவஸ்தானத்தின் நிலை!

01 Sep, 2020 | 02:03 PM
image

தென் இந்திய ஆந்திர மாநிலத்தில் திருமலை திருப்பதி வெங்கடேஷ்வரர் கோவிலுக்கு அடியார்களினால் பணமாக வழங்கப்படுகின்ற காணிக்கைகளில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டதன் விளைவாக பாரதூரமான பணப்புலக்க        கஷ்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் நிலையில், பல்வேறு வங்கிகளில் உள்ள வைப்புக்கணக்குகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வைப்புக்கணக்குகளில் உள்ள 12 000 கோடிக்கும் அதிகமான ரூபாவை மாதா மாதம் வட்டியை எடுக்கக் கூடிய முறையில் மாற்றுவதற்கு தீர்மானித்திருக்கிறது.

வெள்ளியன்று காலை திருமலையில் நடைபெற்ற தேவஸ்தான நம்பிக்கை பொறுப்பாளர் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுகால வரையில் திருமலை தேவஸ்தானம் வங்கிகளில் காலாண்டு , அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் அதன் பணவைப்புக்களை செய்துவந்தது. வைப்புக்களின் முதிர்ச்சியின் முடிவில் மாத்திரமே வட்டி பெறப்படும்.

' இப்போது இந்த வைப்புக்கள் எல்லாவற்றையும் மாதாந்த அடிப்படையில் வட்டியைப் பெறுவதற்கான முறையில் மாற்றி வைக்க நாம் தீர்மானித்துள்ளோம். வைப்புக்கள் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும் போது ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுப்பதற்கும் நடைமுறை செலவுகளை சமாளிப்பதற்கும் வெங்கடேஷ்வர சுவாமிக்கு கிரமமான மதக் கிரியைகளை நடத்துவதற்கும் பயன்படுத்தக் கூடியதாக மாதா மாதம் வட்டியை எம்மால் பெற முடியும்.' என்று திருமலை தேவஸ்தானத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் வை.வி.சுப்பாரெட்டி கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த வருட மதிப்பீட்டின்படி திருப்பதி தேவஸ்தானம் 12 000 கோடிக்கும் அதிகமான பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்திருக்கிறது. திருப்பதி தேவஸ்தானத்துக்கான 2020-2021 வருடாந்த பட்ஜெட் இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டது. முழு வட்டியாக 706 கோடி ரூபா வருமானம் கிடைப்பதாக நம்பிக்கை பொறுப்பாளர் சபை அதில் குறிப்பிட்டது.

அடியார்கள் காசாக தங்களது காணிக்கைகளை செய்வதற்காக ஆலயத்திற்கு அருகாக வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற வருமானத்திற்கு அடுத்த இரண்டாவது உயர்ந்த வருமானமாக வங்கி வைப்புக்களுக்கான வட்டியே விளங்குகிறது. உண்டியல் காணிக்கை மூலம் பெறப்படுகின்ற பணம் 1313 கோடி ரூபா என்று தேவஸ்தானம் வருடாந்த பட்ஜெட்டில் மதிப்பீடு செய்திருக்கிறது.

கொவிட்-19 தொற்று நோய் காரணமாக அடியார்களின் காணிக்கைகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதனால் பாரதூரமான பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே வைப்புக்களை வட்டிகளாக மாதாந்தம் எடுக்கக் கூடியதாக மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட நீண்ட பொது முடக்கம் 80 நாட்களுக்கு ஆலயத்தை பூட்டி வைப்பதற்கு நிர்வாகத்தை நிர்ப்பந்தித்தது. பொது முடக்கம் நீக்கப்பட்ட பின்னரும் கூட யாத்திரிகர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருக்கிறது.

கூடுதலான வட்டியை பெறுவதற்கு வசதியாக கோவிலின் தங்க நகை வைப்புக்களை தற்போதைய குறுகிய கால வைப்புக்கள் என்ற நிலையிலிருந்து நீண்டகால வைப்புக்களாக மாற்ற வேண்டும் என்றும் திருப்பதி தேவஸ்தான நம்பிக்கை பொறுப்பாளர் சபை தீர்மானித்திருக்கிறது. தற்சமயம் தங்க வைப்புக்கள் மூலம் 2.5 சதவீத வருமானமே கிடைக்கிறது. 12 வருடங்கள் வரையான நீண்ட கால வைப்புக்களாக அதை மாற்றும் போது கூடுதல் வீதத்தில் வட்டியைப் பெற முடியும்.

அடியார்களினால் காணிக்கை செய்யப்படுகின்ற உபரி தங்க வைப்புக்கள் 2000 ஆம் ஆண்டில் மாநில அரசாங்கத்தின் உத்தரவொன்றின் பேரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நகைகள் அடியார்களினால் வெங்கடேஷ்வர பெருமானுக்கு காணிக்கை வழங்கப்படுகின்ற போதிலும் அவை ஒருபோதுமே அவரை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டதில்லை. 2015 இல் இந்திய ரிசேர்வ் வங்கி தங்க - பண மாற்று திட்டத்தைக் கொண்டு வந்ததோடு திருப்பதி தேவஸ்தானம் 5387 கிலோகிராம் தங்கத்தை ஸ்டேட் பேங் ஒஃப் இந்தியாவிலும் 1938 கிலோகிராம் தங்கத்தை இந்தியன் ஓவசீஸ் பேங்கிலும் 1381 கிலோகிராம் தங்கத்தை பஞ்சாப் நஷனல் பேங்கிலும் வைப்பு செய்திருக்கிறது. பஞ்சாப் நெஷனல் பேங்கில் வைப்பு செய்யப்பட்ட தங்கம் அதன் வைப்பு முதிர்ச்சியை அடைந்ததை அடுத்து மீளப்பெறப்பட்டு ஸ்டேட் பேங் ஒஃப் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது.

பிரம்மோற்சவத்தை பக்தர்கள் அனுமதிக்காமல் செப்டெம்பரில் நடத்த நம்பிக்கை பொறுப்பாளர் சபை தீர்மானித்திருக்கிறது. திருமலையில் நடத்தப்படுகின்ற மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்று பிரமோற்சவம் ஆகும். ஒரு சம்பிரதாயத்திற்காக மிகவும் எளிமையான முறையில் பிரமோற்சவம் கொண்டாடப்படுவது இதுவே முதல் தடவையாகும். ஒக்டோபரில் இன்னொரு பிரம்மோற்சவம் நடைபெறும் என்றும் கொவிட் நெருக்கடியில் நிலைவரம் மேம்பட்டால் மக்களை அனுமதிக்க முடியும் என்றும் சபையின் தலைவர் கூறினார்.

(இந்துஸ்தான் டைம்ஸ்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54