குடும்ப ஆட்சியென சுட்டிக்காட்டுவது தவறு..!: காரணத்தை கூறுகிறார் டிலான்

Published By: J.G.Stephan

28 Aug, 2020 | 03:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வரவில்லை. மக்களாணையை அமோகமாக பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஜனநாயக ரீதியாகவே மக்கள் ராஜபக்ஷர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்குகிறார்கள். ஆகவே குடும்ப ஆட்சி என எதிர்தரப்பினர் சுட்டிக்காட்டுவது தவறு என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து நாட்டுக்கு பொருந்தும் விதத்திலான திருத்தத்தை உருவாக்கவே  அரசியலமைப்பின் 20வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. முரண்பாட்டை தோற்றுவித்துள்ள 19வது திருத்ததில் ஒரு சில விடயங்களை திருத்துவதால் எவ்வித பயனும் ஏற்படாது. 19ஐ முழுமையாக நீக்கி அதில் குறிப்பிடப்பட்டுள்ள சாதக விடயங்களை புதிய அரசியலமைப்பில் உள்வாங்குவது அவசியமாகும்.

ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சியதிகாரம் செலுத்துகிறார்கள். ஒரு குடும்பம் ஆட்சியில் இருப்பது சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும் என எதிர் தரப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். ராஜபக்ஷர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் இதுவரை காலமும் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வரவில்லை. 2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் மக்கள் செய்த தவறை திருத்திக் கொண்டு மீண்டும். ராஜபக்ஷர்களுக்கு அதிகாரத்தை பலமாகவே வழங்கியுள்ளார்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் சிறந்த அரசநிர்வாகம் முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02