கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'பிக் பொஸ்' முகேன்

Published By: Digital Desk 4

28 Aug, 2020 | 11:42 AM
image

இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் 'பிக் பொஸ்' பிரபலமான நடிகர் முகேன் கதையின் நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

'வெப்பம்' என்ற படத்தை இயக்கிய பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் கதையின் நாயகனாக, பிக் பொஸ் சீசன் 3யில் போட்டியாளராக பங்குபற்றி வெற்றி பெற்ற பாடகரும் நடிகருமான முகேன் ராவ் அறிமுகமாகிறார். 

இவருக்கு ஜோடியாக ஜிவி பிரகாஷ் குமாருடன் 'பேச்சுலர்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகை திவ்யபாரதியும், தொலைக்காட்சி தொடர் நடிகை ஷிவானி நாராயணனும் நடிக்கிறார்கள். 

இதில் நடிகை ஷிவானி நாராயணன் இந்தப் படத்தின் மூலம்  வண்ணத்திரை நடிகையாக அறிமுகமாகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் நடிகராகவும், பாடகராகவும் அறியப்பட்ட முகேன் ராவ் பிக் பொஸ் சீசன் 3 இல் பங்குபற்றி வெற்றி பெற்றதன் மூலம் உலக அளவிலும், சமூக வலைத்தளத்திலும் பிரபலமானார். இவர் தமிழ் திரைப்படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாவதை, அவருடைய ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35