2023 இல் பால் உற்பத்தியில் தன்னிறைவு நாடாக இலங்கை விளங்கும் - அமைச்சர் மஹிந்தானந்த

Published By: Vishnu

28 Aug, 2020 | 08:41 AM
image

இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் பால் உற்பத்தியில் ஒரு தன்னிறைவு நாடாக விளங்கும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ‘சொபாக்கிய தூரநோக்கு’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையை ஒரு தன்னிறைவு நாடாக மாறச்செய்யும் பொருட்டு 2023 ஆம் ஆண்டளவில் நாட்டின் பாலுக்கான தேவையை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நோக்கில் தோட்டக் கம்பனிகளுக்கும் மற்றும் உள்நாட்டு முதலீட்டுத் தரப்புகளுக்கும் இடையில் ஒரு விஷேட பேச்சுவார்த்தை நேற்றுமுன்தினம் (இன்று) கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே  கதலைமையில் நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்,

‘நாட்டில் 22 தோட்டக் கம்பனிகள் உள்ளன. ஒரு தோட்டக் கம்பனிக்கு ஆயிரம் பால் மாடுகளை வாங்குமாறு நாம் கூறினோம். அதே போன்று, அதற்கு தேவையான உட்கட்டமைப்பை வசதிகளை அரசாங்கம் வழங்கும். அதற்கு இணங்க, தொழில்நுட்ப அறிவு, நிவாரணம், நிதி உதவி, கால்நடைகளின் உணவு உற்பத்திக்கான நிலம் என்பனவும் மற்றும் ஏனைய வசதிகள் அனைத்தும் வழங்கப்படும்.

தற்பொழுது வருடாந்தம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் உற்பத்தியை இதன் மூலம் 422 மில்லியன் லீற்றர்களிலிருந்து 750 மில்லியன் லீற்றர்களாக அதிகரிக்க முடியும். 

அதே போல் இந்த திட்டத்திற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் உதவியைப் பெற்றுக் கொள்ளவும் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலமாக நாம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை பாதுகாப்போம். அவர்கள் செய்ய வேண்டியது அந்த 22 தோட்டக் கம்பனிகளுக்கு கால்நடைகளை வாங்குவது மட்டுமே. கூறப்பட்ட அந்த வசதிகள் அனைத்தையும் நாங்கள் வழங்குவோம். 

அதன்படி, 22,000 பால் மாடுகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் வழங்கும். அந்த விதத்தில்தான் விவசாயத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பை அதிகரிக்க நாம்எதிர்பார்க்கின்றோம். 

ஏனென்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு இதற்கு முன் 37% வீதமாக காணப்பட்டது. ஆனால் கடந்த காலத்தில் இது 7%வீதமாக குறைந்துள்ளது. விவசாயத்தின் முக்கிய அங்கமான பால் உற்பத்தி மிகவும் முக்கியமானதாகும். எனவே, பால் உற்பத்தியாளர்களை பாதுகாத்து, இந்த புதிய வேலைத் திட்டங்கள் ஜனாதிபதியின் அறிவுறுத்தல் பிரகாரம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

அமைச்சர் கனக ஹேரத், ஜனக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தினதும் மற்றும் தனியார் துறையினதும் தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கலாக பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44