தென் கொரிய பாராளுமன்றத்துக்கு பூட்டு 

Published By: Digital Desk 3

27 Aug, 2020 | 05:13 PM
image

தென் கொரியாவில் பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.

400 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சுய-தனிமைப்படுத்தலில் உள்ளது.

சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே கொவிட் -19 வைரஸ் தொற்றினால் ஆரம்பத்தில் மிக மோசமான  தாக்கத்தை சந்தித்த நாடுகளில் தென் கொரியாவும் ஒன்றாகும்.

அதன் விரிவான தடமறிதல் மற்றும் சோதனைகள் மூலம் பரந்த அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 

ஆனால் தற்போது பெரும்பாலும் புரட்டஸ்தாந்து தேவாலயங்களுடன் தொடர்புடைய கொத்தணி முறையில் கொரோனா பரவுவதை எதிர்த்துப் போராடுகிறது.

இன்று வியாழக்கிழமை நிலவரத்தின் படி, இனங்காணப்பட்ட 441 புதிய கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானோர் சியோல் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை கட்சி கூட்டத்தில் பங்கேற்ற ஒரு புகைப்பட ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றம் மூடப்படுள்ளது.

இதன் விளைவாக கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் பாராளுமன்றத் தலைவர் உட்பட 10 க்கும் மேற்பட்ட உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் பரிசோதனைகளுக்கு உட்பட்டு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கூட்டத்திற்குப் பிறகு புகைப்பட ஊடகவியலாளர், வார இறுதியில் சந்தித்த உறவினர் ஒருவர் தன்னை பரிசோதித்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் விளைவாக அதிகாரிகள் புதன்கிழமை நள்ளிரவு நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அனைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளையும் வியாழக்கிழமை முதல் இடைநிறுத்த உத்தரவிட்டார்கள். அத்தோடு சட்டசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டு தொகுதி கட்டிடம் மூடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் திட்டமிடப்பட்ட கூட்டங்களையும் ரத்து செய்தன.

புகைப்படக் கலைஞர் புதன்கிழமை சட்டசபையில் சுமார் 50 பேருடன் தொடர் கொண்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் 32 பேர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தம் செய்வது இது இரண்டாவது முறையாகும்.

பெப்ரவரியில் ஒரு நிகழ்வில் பங்கேற்றவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பாராளுமன்ற செயற்பாடுகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால்  18,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன், 313 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35