சிந்திப்பார்களா ?  

Published By: Priyatharshan

27 Aug, 2020 | 02:48 PM
image

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலேயே இப்போது பேசப்படுகின்றது. எவர் எதிர்த்தாலும் நாங்கள் அதனை மாற்றியே தீருவோம். தேர்தலுக்கு முன்னரே அதனைத் தெரிவித்தே மக்கள் ஆணையைக் கேட்டோம். மக்கள் அதனை ஏற்றே வாக்களித்துள்ளனர் என்று அரசாங்கம் கூறிவருகின்றது.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கு முன் 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

மேலும் தனிநபர்களின் விருப்பங்களை பின்தள்ளிவிட்டு கட்சி பேதமற்ற, மக்கள் எதிர்பார்க்கும் பாரிய அரசியல் அமைப்பு மாற்றத்தை மேற்கொள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இருந்த போதிலும் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சியும் 19 ஆவது திருத்தத்தை நீக்குவது தொடர்பில் தமது எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.

19 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் 13 ஆவது திருத்தம் என்பன அனைத்தும் நீக்கப்பட்ட  நிலையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதே அரசின் குறிக்கோளாக இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டு மக்களின் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரே ஒரு அரசியல் அமைப்பு திருத்தம் என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ஒரு குடும்பத்தின் பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசு கொண்டுவர முயற்சிக்கும் புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக தகவல் அறியும் உரிமை ; சுயாதீன தேர்தல் ஆணைக்குழு; அரசியலமைப்பு பேரவை : பொலிஸ் ஆணைக்குழு ; இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு என்பன ஸ்தாபிக்கப்பட்டன. இதனூடாக ஜனநாயகம் பேணப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கண்டறிவதற்காக நடத்திய கருத்துக்கணிப்பில் 70 வீதமான மக்கள் 19 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்றும் கூறிய அவர், ஒரு குடும்பத்தின் பலத்தை தக்கவைத்துக்கொள்ள அரசு புதிய புதிய திருத்தம் ஒன்றை கொண்டுவர முயல்கிறது என்று சாடியுள்ளார்.

இன்றைய நிலையில் நீ சொல்வதை சொல் நான் செய்வதை செய்வேன் என்ற போக்கே தொடருகிறது. இந்த நிலை தொடரும் வரை எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

குறைந்தபட்சம் ஜனநாயக பண்புகளையேனும் இழந்து விடாத வகையில் அரசியல்வாதிகள் சிந்திப்பதும் செயற்படுவதும் அவசியம்.

அதுவே நாட்டினதும் மக்களினதும் சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04