இந்தியாவின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் எதனையும் இலங்கை செய்யாது - இலங்கை வெளியுறவுச் செயலர் உறுதி 

Published By: Vishnu

28 Aug, 2020 | 01:19 PM
image

இலங்கை தனது புதிய வெளியுறவுக் கொள்கைத் திட்டமாக “இந்தியாவின் முதல் அணுகுமுறையை” கடைப்பிடித்து புதுடில்லியின் மூலோபாய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்கும் என்று இலங்கையின் வெளியுறவு செயலர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து, அட்மிரல் கொலம்பகே ஆகஸ்ட் 14 ஆம் திகதி இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் தலைவராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பத்திரிகையொன்று அளித்துள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய பிராந்திய வெளியுறவு கொள்கையை இலங்கை தற்போது கொண்டுள்ளது. எனவே, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் இலங்கை செய்யாது.

பிராந்திய பாதுகாப்பில் முக்கிய அம்சமாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிப்பார். சீனா இரண்டாவது பெரிய பொருளாதார நாடு, இந்தியா 6 ஆவது பெரிய பொருளாதார நாடு. கடந்த 2018 இல் உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டிய நாடாக இந்தியா இருந்தது.

இந்த இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கு மத்தியில் நாங்கள் இருக்கிறோம். இலங்கையை யாரும் விலைக்கு வாங்க முடியாது. விலைக்கு வாங்கவும் கூடாது. வேறு எந்த நாட்டிற்கு எதிரான செயல்களை செய்ய குறிப்பிட்ட நாட்டை ஒரு தளமாக பயன்படுத்த முடியாது. 

குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக. கிழக்கு துறைமுகத்தில் ஹம்பன்தோட்டாவில் சீனா முதலீடு செய்துள்ளது. இங்கு இந்தியா ஆர்வம் காட்டாததால் அந்த முதலீட்டை சீன நிறுவனம் பெற்றது. இதை வணிக நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17