தாய், மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்ட இந்திய முன்னாள் விளையாட்டு வீரர்: அமெரிக்காவில் கைது 

Published By: J.G.Stephan

27 Aug, 2020 | 11:04 AM
image

தாய், மனைவி இருவரையும் கொன்றதாக ஒப்புக்கொண்ட இந்திய முன்னாள் விளையாட்டு வீரர் இக்பால் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப்பதக்கம் வென்றவர். 62 வயதான இவர் பென்சில்வேனியா மாகாணம் டெலாவேர் கவுண்ட்டியில் வசிப்பவராவார். 

மனைவியையும் தாயாரையும் கொன்றதாக அவரே ஒப்புக் கொண்டார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இக்பால் சிங் வீட்டுக்கு போலீஸ் வந்த போது இக்பால் சிங் இரத்தத்தில் நனைந்திருந்தார். மேலும், தன்னைத்தனே கத்தியால் குத்திக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் உள்ளே இரண்டு பெண்களின் சடலங்கள் தெரிந்ததையடுத்து, இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை என்பதாலும், செயலின் கொடூரத்தன்மையினாலும் இவருக்கு பிணை  மறுக்கப்பட்டது. வழக்கறிஞர் வைத்துக் கொண்டதாக தெரியவில்லை.

தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அங்கு போலீஸ் காவலிலேயே இருந்துள்ளார்.  தாயார் நசீப் கவுர் தொண்டையை அறுத்தும், மனைவி ஜஸ்பால் கவுர் தொண்டை அறுக்கப்பட்ட நிலையிலும்  கிடந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

மேலும், சம்பவ இடத்திலேயே இருவரும் மரணமடைந்தனர். ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணம் இன்னமும் தெரியாத நிலையில், இக்பால் சிங் கொலையை செய்து விட்டு தன் மகனுக்கு தொலைபேசியில், நான் உன் அம்மாவையும் பாட்டியையும் கொலை செய்து விட்டேன், போலீஸைக் கூப்பிடு என்று கூறியுள்ளார். பிறகு மகளையும் அழைத்து இதே போல் பேசியுள்ளார் இக்பால் சிங். அப்போதுதான் வீட்டுக்கு வந்த போது இக்பால் சிங் செய்த கொடுஞ்செயல் தெரியவந்தது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35