பிரதமர் மஹிந்தவை சந்தித்து கலந்துரையாடிய பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர்

Published By: Vishnu

27 Aug, 2020 | 07:53 AM
image

பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால், நேற்று (26) காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கை - இங்கிலாந்துக்கிடையிலான ஒத்துழைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அண்மைய தேர்தல் வெற்றிக்கு இங்கிலாந்தின் வாழ்த்துக்களை தெரிவித்த லிசா வான்ஸ்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் வலுவான ஆணையை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இலங்கையருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் ஐந்தாண்டு நோக்கத்தைக் குறிப்பிட்டு, பாதுகாப்பான குடிநீர் துறையில் ஒத்துழைப்புகளை பரிசீலிக்குமாறு பிரதமர் உயர் ஸ்தானிகரைக் கேட்டுக்கொண்டார்.

இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதில் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக அமைச்சர் ரணில் ஜெயவர்தனவும் ஆர்வமாக உள்ளதாகவும், பரஸ்பர நலனுக்காக வியாபாரம் செய்வதில் எளிதாக விவாதிக்க விரும்புவதாகவும்  உயர் ஸ்தானிகர் வான்ஸ்டால் தெரிவித்தார்.

அத்துடன் துறைமுக நகரத்தின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இலங்கை அதன் மூலோபாய இருப்பிடத்தின் நன்மையை முதலீட்டை ஈர்க்க பயன்படுத்தலாம் என்பதை லிசா வான்ஸ்டால் சுட்டிக்காட்டியுள்ளார்.

பசுமை நிதி, பல்லுயிர், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் நிலையான விவசாயம் உள்ளிட்ட விடயங்கள் மீதும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30