அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக ஒன்றிணையுமாறு ராஜித அழைப்பு!

26 Aug, 2020 | 07:26 PM
image

(செ.தேன்மொழி)

19 ஆவது அரசியலமைப்பு திருத்தமே நாட்டு மக்களது நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரேவொரு அரசியலமைப்பு திருத்தம் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன, ஒரு குடும்பத்தின் பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறும் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையை வெளிநாட்டவர்கள் ஆட்சிக்கு உட்படுத்தியபோது அவர்களது பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பல அரசியலமைப்புகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அதனைப் போன்றே சுதந்திரத்திற்கு பின்னர் சில அரசியல் கட்சிகளினதும் அந்த கட்சிகளின் தலைவர்களினதும் பலத்தை பாதுகாப்பதற்காக அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டதுடன் , பல திருத்தங்களும் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவினால் 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு நாடளாவிய ரீதியில் பெறும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தன. 1994 தொடக்கம் இந்த நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டு வந்த போதும் அதில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வில்லை.

இதேவேளை இந்த அரசியலமைப்பில் சில திருத்தங்கள் மாத்திரம் செய்யப்பட்டு வந்துள்ளன. 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்திருந்ததுடன் , இதற்கு மக்கள் விடுதலை முன்னணியினரும் ஆதரவளித்திருந்தனர்.இதனூடாகவே முதல் முதலாக சுயாதீன ஆணைக்குழுக்கள் என்ற ஒரு விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்வரப்பட்டது. இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு மேலும் பலத்தை ஏற்படுத்தும் வகையில் இரு தடவைகள் மாத்திரமே ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட முடியும் என்று இருந்த சட்டம் மாற்றி அமைக்கப்பட்டு. ஒருவர் எத்தனை தடவை வேண்டும் என்றாலும் ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்படலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதனால் அக்காலப்பகுதியில் பல நெருக்கடி நிலைமைகள் தோற்றம் பெற்றிருந்தன. அதற்கமைய பிரதம நீதியரரசுக்கு கூட அவரது செயற்பாடுகளை சுயமாக செய்யமுடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் ஜனநாயகத்தை போற்றி செயற்படும் சிவில் அமைப்புகள் மற்றும் மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரர் உட்பட பிக்குகள் சங்கத்தினரதும் , நாட்டு மக்களினதும் பெரும்பான்மை ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இதுவே மக்கள் மீது அக்கறைக் கொண்ட முதல் அரசியலமைப்பு திருத்தமாக கொண்டுவரப்பட்டது.  இந்நிலையில் அந்த திருத்தத்திலே தகவலறியும் உரிமை, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு , அரசிலமைப்பு பேரவை, பொலிஸ் ஆணைக்குழு , கணக்காய்வு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு , இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு என்பன ஸ்தாபிக்கப்பட்டதுடன். இதனூடாக ஜனநாயகமும் வென்றெடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்றுள்ளதன் காரணமாக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க முயற்சிக்கின்றது. இது மிகவும் பிழையான செயற்பாடாகும்.  நாட்டு மக்கள் அவர்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக எந்த அரசியல் கட்சிகளுக்கும் பலத்தை பெற்றுக் கொடுப்பதில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதற்கு முன்னின்று செயற்பட்டதை மறந்து தற்போது பேசிவருகின்றார். இந்நிலையில் ஆளுந்தரப்பினர் அமைச்சர் அலிசப்ரி , வியத்மக அமைப்பினரை காண்பித்து 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்களின் எண்ணங்களை கண்டறிவதற்காக நாம் நடத்திய ஆய்வொன்றில் 70 வீதமான மக்கள் 19 ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில் மக்கள் இந்த திருத்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.  ஆனால், ஒரு குடும்பத்தின் பலத்தை தக்கவைத்து கொள்வதற்காக அரசாங்கம் புதிய திருத்தம் ஒன்றை கொண்டுவர முயற்சித்து வருகின்றது. இதற்கு நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தனிக்கட்சி ஒன்றுக்கு பெரும்பான்மை ஆதரவு வழங்கப்பட்டலே நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தீர்மானங்களே எடுக்கப்படும். அதற்கமையவே  அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19