தெற்கு இத்தாலியின் புக்லியா பிரதேசத்தில் இரண்டு பயணிகள் புகையிரதம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதுள்ளது.கோராடோ மற்றும் ஆண்டிரியா நகரங்களுக்கு இடையிலான ஒரு வழி புகையிரத பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரண்டு புகையிரதங்களும் நான்கு பெட்டிகளை கொண்டது. வேகமாக மோதியதால் இரண்டு புகையிரதங்களிலும் உள்ள முன் பெட்டிகள் முற்றாக சேதமடைந்தது.

முதலில் வந்த தகவல்படி இந்த விபத்தில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இதுவரை மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள கோரடா நகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காப்பாற்ற, பொதுமக்கள் இரத்த தானம் செய்ய முன்வரும்படி, கோரடா நகர மேயர் அழைப்பு விடுத்துள்ளார். உயிரிழப்புக்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.