மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளவேண்டும் - சபாநாயகர்

26 Aug, 2020 | 12:06 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக்கொண்டு, மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுகான திசைமுகப்படுத்தல் செயலமர்வு  பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலின் மூலம் பல வருடகாலங்களுக்கு பின்னர் பரிபூரணமான பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கும் அனைவரும் கடந்த 5மாதங்களாக பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி வந்திருக்கின்றனர்.அதனால் புதிதாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் தொடர்பாக சிறந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றே நாங்கள் நினைக்கின்றோம்.

அத்துடன் நாட்டில் இதுவரை காலமும் தீர்த்துகொள்ள முடியாத பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவே மக்கள் பாரிய வெற்றியை எமக்கு தந்திருக்கின்றனர். விசேடமாக அரசியலமைப்பில் பல முரண்பாடுகளை கடந்த காலங்களில் எமக்கு காணமுடிந்தன. அவை அனைத்தையும் தீர்த்துக்கொள்ளவேண்டி இருக்கின்றன. அதேபோன்று எதிர்காலத்திலும் அவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படாதவகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதனால் மக்கள் பாரி எதிர்பார்ப்புடனே எங்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு கொஞ்மேனும் பாதிப்தை ஏற்படுத்தாதவகையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளவேண்டும். அன்றாட நடவடிக்கைகளைப்போல் எதிர்கால நடவடிக்கைகளின்போதும் எம்மால் தவறுகள் எதுவும் இடம்பெறாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அதற்காகவே புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான கருத்தரங்களை நடத்தி பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அடிப்படை தெளிவூட்டல்களை மேற்கொள்கின்றோம் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50