ஹெரோயின், துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

Published By: Digital Desk 4

25 Aug, 2020 | 07:21 PM
image

(செ.தேன்மொழி)

ரத்கம பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தேகொட பகுதியில் இன்று செவ்வாய்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது 6 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் , ரி 56 துப்பாக்கிகள் இரண்டும் , அதன் 82 தோட்டாக்களும் , 9 மில்லி மீட்டர் துப்பாக்கிகள் இரண்டும் , அதன் 39 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இந்த சட்டவிரோத பொருட்கள் அனைத்தும் பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள பாதாளகுழு உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04