நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் அல்ல என தொழிற் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்ட பின்னரே கைதுகள் இடம்பெறுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமின்றி கைதுசெய்யப்படுபவர்கள்  எந்தவித தண்டனைகளும் இன்றி விடுதலை செய்யப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுவருவதாக அவர்  குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை தற்போது நீதித்துறையானது சுதந்திரமாக செயற்படுகின்றது. அதற்கான சரியான அடித்தளத்தை அரசாங்கம் அமைத்துக் கொடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.