ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்

Published By: Priyatharshan

25 Aug, 2020 | 11:06 AM
image

19 ஆவது அரசியலமைப்பை திருத்துவது என்று அரசாங்கமும்  13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை இல்லாதொழிப்பது என்று மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவும் சூளுரைத்து வருகின்றனர்.

13 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தான் இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்ற நாள் முதல் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றார் சரத் வீரசேகர.  

மாகாண சபைகள் முறைமை இந்த நாட்டுக்கு பொருத்தமில்லாத முறையாகும். இந்தியாவின் ஆதிக்கத்தினால் வேண்டுமென்றே எமக்கு திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துவதா ?  இல்லையா  ? என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் .

இந்தியாவின் நோக்கங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது என்பதே எனது தனிப்பட்ட நோக்கம் என்றும் அவர் மேலும் அழுத்திக் கூறியுள்ளார்.  

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்  பாக்லே, 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை பின்னடித்தால் இந்தியா உயர்மட்டத்தில் அழுத்தங்களை பிரயோகிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இது ஒருபுறமிருக்க பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட வேளை இந்தியாவின் துணையுடனேயே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததாக கூறி இருந்தார் .

இவ்வாறான பின்னணியில் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும் அதனை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் சரத் வீரசேகர கூறிவருவது சிந்திக்கத் தக்கதாகும்.

இதனிடையே ஜனநாயக ஆட்சி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க முயற்சிப்பதாகவும் ஜனநாயக ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஏற்பாட்டை அரசு கொண்டு வந்தால் அதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.  

இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கூறுகையில்,  ஜனாதிபதி 19 ஆவது திருத்தத்தை நீக்குவதாக கூறியுள்ளார்.  இதனை நீக்க முயற்சிப்பது பதவி மோகத்தின் மீதானதாகும். அந்தத் திருத்தத்தை நீக்க முயற்சிப்பது மேலும் ஜனநாயகத்தை வேறொரு திசையில் திருப்ப முயற்சிப்பதாகும்.

இந்நிலையில் நாம் அவதானம் செலுத்த வேண்டியது அவசியம். சுதந்திரமான பிரஜைகளாக வாழ்வதா அல்லது அடிமைகளாக மாறுவதா என்பதேயாகும்.  அத்துடன் இது ஜனநாயகத்துக்கு எதிரான சோதனைக்காலம் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மாற்ற அரசு முயற்சித்தால், அதற்கு எதிரான ஜனநாயக அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நாட்டைப் பொறுத்தமட்டில் ஆட்சிகள் மாறும்போது காட்சிகளும் வேகமாக மாறுவது புதிய விடயமல்ல. எதிலுமே ஒரு நிலையானதோர் தன்மையை காண முடிவதில்லை. அந்த வகையில் அனைவரும் கூறுவது போன்று இந்த நிலைமையும் கடந்து போகும் என்று கூறுவதைத் தவிர வேறு என்ன கூறலாம் ?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04