டயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest”

24 Aug, 2020 | 05:34 PM
image

இலங்கையின் இசையின் மறக்கமுடியாத அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொண்டுவரும் Dream Music Fest, இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சி இன் அனுசரணையில் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி இலங்கை நெலும் பொகுன மகிந்த இராஜபக் ஷ திரையறங்கு வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வானது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் - 19 முடக்கமானது தளர்த்தப்பட்ட பின்னர் அனைவரையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாகும். 

இந்நிகழ்வின் மூலம் மிகவும் பிரபலமான இசைக்கலைஞர்கள் மற்றும் இசைக் குழுக்களினால் வழங்கப்படும் கிழக்கு மற்றும் மேற்கத்திய இசையினை பார்வையாளர்கள் அனுபவித்திட முடியும். நிகழ்வானது மேலும் பலதரப்பட்ட வயது வித்தியாசங்களை சார்ந்த உள்@ர் கலைஞர்கள் மற்றும் பிரபலமான DJS> வாத்திய கலைஞர்கள் மற்றும் பாடகர்களை உள்ளடக்கியுள்ளதுடன் பல்வேறுபட்ட இரசனைகளை கொண்ட பார்வையாளர்களைக் கவரும் வகையில் இடம்பெறவுள்ளது. 

பங்கேற்கவுள்ள களைஞர்களில் சிறப்பு கலைஞர்களாக சுனில் பெரேரா, பாத்திய மற்றும் சந்தேஷ், ரந்தீர் விடான உமாரா சின்ஹவன்ச, கெவின் டி அல்மெய்தா, கசுன் கல்ஹார, ஆத்மா லியானகே, சமிதா முடுங்கொட்டுவ, சங்க தினேத், சனுக விக்ரமசிங்க, லஹிரு பெரேரா, ரித்மா வீரவர்;தன் மற்றும் தனித் ஸ்ரீ ஆகியோரும் பங்கேற்கவுள்ளார்கள்.

இந்நிகழ்வின் போது அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளும் கடுமையாக கடைபிடிக்கப்படும். நபர்களுக்கிடையிலான நேரடி தொடர்பை முற்றாக குறைப்பதன் நோக்கமாக, டிக்கெட்டுகளை www.myticket.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே கொள்வனவு செய்ய முடியும். மேலும் பங்கேற்பாளர்களின் நெரிசல்களை குறைக்கும் வகையில் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே நுழைவு வாயில்கள் திறக்கப்படும். 

நிகழ்வு இடம்பெறும் வளாகமானது சானிடையிசர் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதோடு அனைத்து நுழைவாயில்களிலும் உடல் வெப்பநிலை சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் கைகளை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந் நிகழ்வினை Event management association, ஊடக பங்காளரான தெரண டிவி உடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து, பொழுதுபோக்குத் துறை குறிப்பிடத்தக்க நிதிசார்ந்த இழப்புகளை சந்திக்க நேரிட்டுள்ளது. Dream Music Fest இன் முக்கிய நோக்கம், பொழுதுபோக்குத் துறைக்கு தொழில்துறைக்கு புதிய உயிர் ஊட்டலையும் ஆற்றலையும் கொண்டுவருவதோடு, இலங்கையின் பொழுதுபோக்குத் துறையின் வருகையை கொண்டாடுவதற்காகவும் அதன் பார்வையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத இசை அனுபவத்தை அளிக்கும் புதிய தொடக்கத்தினை வழங்குவதுமே ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57