ஐ.தே.கவின் தலைமைத்துவ சவாலை ஏற்க தயார் - கரு ஜயசூரிய

Published By: Digital Desk 3

24 Aug, 2020 | 04:45 PM
image

(நா.தனுஜா)

பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து மீட்டெடுத்து, இந்தக் கட்சியினால் நாட்டிற்கு ஆற்றவேண்டிய சேவைகளுக்கான தலைமைத்துவத்தை வழங்குமாறு பலரும் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். கட்சியினதும் நாட்டினதும் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைத்துவம் வழங்குகின்ற சவாலை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானித்திருப்பதுடன், அதனைக் கட்சித்தலைவருக்கும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறேன் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுச்செயற்படுவது குறித்து அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

எமது நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்கிய, தேசப்பற்றுடைய, தேசியவாத கட்சியாக டீ.எஸ்.சேனாநாயக்கவினால் தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியைக் குறிப்பிட முடியும். அதேவேளை 21 ஆம் நூற்றாண்டில் ஏற்படக்கூடிய சவால்களை வெற்றிகொள்வதற்கு அவசியமான பொறிமுறை, நிபுணத்துவம் மற்றும் சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்மை ஆகியவற்றையும் ஐக்கிய தேசியக் கட்சியே கொண்டிருக்கிறது. அவ்வாறிருப்பினும் கூட தற்போது ஐக்கிய தேசியக் கட்சி முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலை கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் பலர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

பெருமளவானோரின் அபிமானத்திற்கும் உரிய ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொண்டிருக்கும் இந்த நெருக்கடி நிலையிலிருந்து அதனை மீட்டெடுத்து, அதற்குரிய இடத்தை மீண்டும் கைப்பற்றி, கட்சியினால் இந்த நாட்டிற்கு ஆற்றப்பட வேண்டிய சேவையை முன்னெடுப்பதற்கு முன்வருமாறு பொதுத்தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் பலரும் எனக்கு அழைப்புவிடுத்தார்கள். அத்தோடு மகாநாயக்க தேரர்கள் உள்ளடங்கலான அனைத்து மதகுருமார், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், புத்திஜீவிகள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயலாற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள், மாகாணசபைகள் மற்றும் பிரதேச சபைகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், கட்சியுடன் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள், இளைஞர் அமைப்புக்கள், நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் சிவில் சமூக அமைப்புக்களும் என்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தன.

அவர்கள் அனைவருமே குறிப்பாக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினர். அதாவது எதிர்வரும் தேர்தல்களில் கட்சி சூன்யநிலையை அடைவதைத் தவிர்ப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவென்பதே ஆகும். எவ்வாறெனினும் மக்களின் வேண்டுகோளை செவிமெடுத்து, கட்சி ஆதரவாளர்களின் ஆலோசனைக்கமைவாக கட்சியில் தற்போது  மிகவும் அவசியமான மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்களைச் செய்து, புதிய பாதையை நோக்கிய விரைவான மீள்ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியினால் தற்போதைய சவாலில் இருந்து மீண்டெழ முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

கடந்த 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரணில் விக்கிரமசிங்க கட்சியைப் பொறுப்பேற்றுக்கொண்டதோடு, கட்சித்தலைமைத்துவத்தின் அழைப்பின்பேரில் நான் அந்தக் கட்சியின் உறுப்பினராக இணைந்துகொண்டேன். அதனைத் தொடர்ந்து அதில் பல்வேறு பதவிகளை வகித்ததுடன், 2014 ஆம் ஆண்டில் ஊவா மாகாணசபைத் தேர்தலுக்குத் தலைமைத்துவத்தை வழங்கி, ஐக்கிய தேசியக் கட்சியின் மேம்பாட்டிற்காக செயலாற்றி வந்திருக்கின்றேன்.

நாட்டில் ஜனநாயகத்தையும் செயற்திறனையும் உறுதிப்படுத்துவதற்காகவே நான் எனது ஒட்டுமொத்த அரசியல் வாழ்விலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கின்றேன். அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதற்கும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும் நான் தலைமைத்துவத்தை வழங்கியிருக்கிறேன். இவ்வாறு கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டில் முறையான ஜனநாயக மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கான முன்நின்று செயற்பட்டு வந்திருக்கிறேன்.

இந்நிலையில் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பல்வேறு தரப்பினராலும் எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் ஆராயும் அதேவேளை, கட்சியினதும் நாட்டினதும் மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைத்துவம் வழங்குகின்ற சவாலை என்னால் ஏற்றுச்செயற்பட முடியும் என்பதை தற்போதைய கட்சித்தலைவர் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறியத்தருவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். கட்சியையும் நாட்டின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டே நான் இந்தத் தீர்மானத்தை எடுத்திருப்பதுடன், எனது தாய் நாட்டிற்கான என்னால் செய்யப்பட வேண்டிய அனைத்து கடமைகளையும் அர்ப்பணிப்புடன் செய்வதற்கும் தயாராக இருக்கின்றேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46