கொழும்பிலுள்ள 3 சிறைச்சாலைகளுக்கு அதிரடிப்படை

Published By: Digital Desk 3

24 Aug, 2020 | 03:41 PM
image

(எம்.மனோசித்ரா)

சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற சட்ட விரோத செயற்பாடுகளை முற்றாக கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை முதல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கேற்ப கொழும்பிலுள்ள 3 சிறைச்சாலைகளில் இன்று  முதல் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய குறிப்பிடுகையில், 

வெலிக்கடை , மெகசின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலை ஆகியவற்றிலேயே பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏனைய பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய சிறைச்சாலைகளிலிருந்து முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிராக துரிதமாக செயற்படக்கூடிய அதிகாரிகளை சிறைச்சாலை திணைக்களம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படைக்கு  நியமித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணர்தன அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு சிறைச்சாலைகளில் தற்போதுள்ள முறைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும், மோசமான குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைவைக்கப்பட்டுள்ள பூச மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளிலும் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04