போசாக்கின்மை, வயதுக்கேற்ற வளர்சியின்மை,   வருமானம் இல்லாத வாழ்க்கை : இந்த அரசியல்வாதிகள் தேவைதானா?: மலையகத்தில் அனுர கேள்வி

Published By: MD.Lucias

12 Jul, 2016 | 04:14 PM
image

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வீடுகள் இல்லாமல், மலசலகூட வசதிகள் இல்லாமல் சுவாசிக்க கூடிய அறைகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களை ஏமாற்றி வாக்குகளை பெற்ற தலைவர்கள் கொழும்பில் ஒரு வீடு, குளிராக இருக்க நுவரெலியாவில் ஒரு வீடு, காற்று வாங்குவதற்கு கடற்கரையில் ஒரு வீடு என சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அட்டன் எபோட்சிலி தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

போசாக்கின்மை

நமது மக்கள் தோட்ட லயன் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களில் 5 வயதுக்கு குறைவான பிள்ளைகள் 133 வீதம் போசாக்கின்மையை கொண்டு வாழ்கின்றனர். 

இம் மாவட்டத்தில் மூன்று பிள்ளைகளை எடுத்துக்கொண்டால் அதில் ஒரு பிள்ளைக்கு போசாக்கு குறைபாடு இருக்கின்றது.“ இதனால் வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி இல்லை. 

ஆசிரியர் பற்றாக்குறை

மலையகத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் கல்வி கற்கும் உரிமையை எமது பிள்ளைகள் இழந்து வருகின்றனர். இது இம் மக்களுக்கு சாப கேடா ? என கேள்வி எழுப்பினார்.

பாடசாலையை பொறுத்த வரையில் நுவரெலிய  மாவட்டத்தில் தளபாட வசதிகள் இல்லை. 8 பாடங்கள் கொண்ட பாட விதானத்தில் தினமும் மூன்று பாடங்களே கற்பிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் இருந்தும் முறையாக கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. 

நாம் ஏழைகள் அதற்கு ஏற்றா போல் தான் கல்வி நிலைமை முன்னெடுத்து செல்லப்படும் என்ற நிலைமைக்கு இவர்கள் தள்ளிவிடப்பட்டுள்ளனர். 

நான்கு வீதமானோரே சிறந்த பெறுபேறு

கடந்த வருடம் க.பொ.த பரீட்சையில் நூற்றுக்கு நான்கு வீதமானவர்களே சிறந்த சித்தி எய்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலைமை கிராம பகுதிகளிலும் உண்டு. ஆனால் நீங்கள் வாக்களித்த அமைச்சர்கள் அவர்களின் பிள்ளைகளை வெளிநாட்டு பாடசாலைகளில் கல்வி பயில அனுப்புகின்றனர்.

அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் கல்வி

மஹிந்தவின் மூத்த மகன் இங்கிலாந்திலும், சிறிய மகன் ரஷ்யாவிலும், மைத்திரிபால சிறிசேனவின் மகள் இங்கிலாந்திலும், எஸ்.பி. திஸாநாயக்கவின் பிள்ளை இங்கிலாந்திலும் கல்வி கற்கின்றனர். தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி தேவைப்பாடுகள் முழுமையாக பூர்த்தியடையப்படவில்லை.

 ஆனால் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்படுவதே அதிகமாக உள்ளது.

உணவுக்காக ஒருமாதத்துக்கு 1000 இலட்சம் செலவழித்த மஹிந்த 

மஹிந்த ராஜபக்ஷ 2014 டிசம்பர் வரை ஆட்சி செய்த காலப்பகுதியில் உணவுக்கென 1000 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளார். தொழிலாளர்கள் வாழ்க்கை முழுவதும் உழைத்து செலவு செய்யும் பணத்தை இவர் ஒரு மாதத்தில் செலவு செய்துள்ளார். 

மிக குறைவான சம்பளத்தை பெறும் தொழிலாளர்கள்

 நாட்டில்  சம்பளத்தை மிக குறைவாக பெறுகின்றவர்கள் தோட்ட தொழிலாளர்களே ஆகும். வருமானம் இல்லாத வாழ்க்கை தேவை தானா ? இதற்காகவா வாக்களித்தீர்கள். 10 கிலோ மீற்றர் செல்ல பிரதமர் 300 இலட்சத்துக்கு இரண்டு கார்களை வாங்குகின்றார். 

மத்திய வங்கியின் பணிப்பாளர் அர்ஜீன மகேந்திரன் அவருடைய மருமகனுக்காக 16 ஆயிரம் இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளார். பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து வந்தார். மாத்தறை, கம்பஹா ஆகிய இடங்களில் பாரிய வீடுகளை அமைத்துள்ளார். சொத்து எங்கே இருந்து வந்தது. தெஹிவளை சுற்று பிரதேசத்தில் ராஜபக்ஷவின் மகன் வீடு அமைத்துள்ளார். கேட்டால் பாட்டி கொடுத்தார் என தெரிவிக்கின்றார். பாட்டியின் வயது 84.

 ரவி கருணாநாயக்க வாகனம் பெறுவதற்கென 45 ஆயிரம் இலட்சம் செலவு செய்கின்றார். பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தால். வெளியில் வந்து குரல் கொடுக்குமாறு தெரிவிக்கின்றனர்.

இவர்கள் பொது மக்களின் சொத்துகளை வீண் விரயம் செய்கின்றார்கள். சமூக பிரச்சினை கூடியுள்ளது. இதற்கு பின்னணி அரசியல்வாதிகள். தோட்டப்பகுதி மக்களுக்கு சுகாதார சேவைகள் இல்லை. 

சட்டத்துக்கு விரோதமான சுகாதார சேவை முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் வாக்கு வாங்கிய சுகாதார அமைச்சர் ஏனையோர்கள் இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் சிகிச்சைக்கு செல்கின்றார்கள்.  

இந்த நிலையில் எமது மக்கள் வைத்தியசாலைக்கு சென்றால் கட்டில் வசதிகள் இல்லை. தரையில் உறங்குகின்றனர், முறைக்கேடாக நடத்தப்படுகின்றனர். இதை இவர்கள் உணர்வதில்லை. 

ஆகையால் இந்த அரசியல் நமக்கு தேவையில்லை. மாற்று நடவடிக்கை கொண்டு வர வேண்டும். இதற்காகவே ஜே.வீ.பீ மக்களை தெளிவுப்படுத்தி வருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04