ட்ரோன் கமரா இயக்கிய குற்றச்சாட்டில் கைதான சீனப் பிரஜைக்கு பிணை!

Published By: Vishnu

24 Aug, 2020 | 06:19 AM
image

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ட்ரோன் கமராவை இயக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சீனப் பிரஜை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி அலரிமாளிமை அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் ட்ரோன் கமராவை இயக்கிய குற்றச்சாட்டில் 30 வயதான சீனப் பிரஜை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் அவரை கொழும்பு, கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணையும் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

உயர் பாதுகாப்பு வலயங்களில் ட்ரோன்களை இயக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் ட்ரோன்கள் இயக்கம் குறித்து கடுமையான வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அனைத்து ட்ரோன்களையும் இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08