நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Published By: Jayanthy

23 Aug, 2020 | 09:50 PM
image

நாட்டில் மேலும் இருவருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் இருந்து நாடுதிரும்பிய இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்றையதினம் ஆறு பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,953 ஆக அதகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 136 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை,  55 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்திருந்தார். 

இதனையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் உயிரிழந்தும் 2,805 குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33