தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கைக்கு சற்று முன் வந்தார்.

பங்களாதேஷில் இருந்து மிஹின் லங்கா விமானசேவையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தூதுவர் ஒருவருடன் இரண்டு நாள் உத்தியோகபூா்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தந்துள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலரையும் சந்தித்து கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.