ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கவலைக்கிடமான நிலையில்!

Published By: Vishnu

23 Aug, 2020 | 09:43 AM
image

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் உடல் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக சிகிச்சைக்காக அவர் சைபீரியாவிலிருந்து ஜேர்மனியின், பேர்லினிலுள்ள ஒருவர் வைத்தியசாலைக்கு சனிக்கிழமை கொண்டு சேர்க்கப்பட்டார்.

இதயைடுத்து வைத்தியர்கள் மேற்கொண்ட சிகிச்சைகள் மற்றும் சோதனைகளின் மூலம் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அலெக்ஸி நவல்னிக்கு வைத்திய வெளியேற்றத்தை ஏற்பாடு செய்த ஆர்வலர் குழுவின் நிறுவனர் இதனை தெரிவித்துள்ளார்.

அலெக்ஸி நவால்னி கடந்த வியாழக்கிழமை சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் என்ற நகரத்திலிருந்து மொஸ்கோவுக்கு திரும்பும்போது, விமானத்தில் மயக்க அடைந்துள்ளார்.

அதன் பின்னர் விமானம் சைபீரியாவின், ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறங்கியதுடன், அங்குள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓம்ஸ்கில் அவசர தரையிறக்கம் இல்லாதிருந்தால், அவர் அப்போதே உயிரிழந்திருப்பார் என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

44 வயதான நவால்னி , உயர் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு பிரசாரங்களுக்காகவும், ஜனாதிபதி விளாடிமிர் புடினை வெளிப்படையாக விமர்சிப்பதற்காகவும் அறியப்பட்டவர், கடந்த காலங்களில் உடல் ரீதியான தாக்குதல்களை சந்தித்தவர் ஆவார்.

அவர் குடித்த தேநீர் விஷம் கலந்ததாக அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17