அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும் நியமனம்  உறுதி: டக்ளஸ்

Published By: Digital Desk 3

22 Aug, 2020 | 05:23 PM
image

பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மற்றும் ஒத்திவைக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் அனைவரையும் எதிர்வரும் செப்ரெம்பர்  15 ஆம் திகதிக்கு முன்னதாக மேன்முறையீட்டை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தின் போது பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் இன்று (22.08.2020) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். அலுவலகத்தில் சந்தித்த போதே அமைச்சர் இக்கருத்தினை தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் குறித்த பட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பித்தர்களில் சுமார் 1500 இற்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பதாரிகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை மேற்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே தொழில்வாய்ப்பினை பெற்றுக் கொண்டவர்கள் என்பதற்கு ஆதாரமாக சேமலாப நிதி கணக்கினை கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படாது தவிர்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது, பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும், சேமலாப நிதிக் கணக்கினை வைத்திருந்தாலும் பட்டப்படிப்பிற்கு பொருத்தமற்ற தொழில்களில் தற்காலிகமாக ஈடுபட்டு வருகின்றவர்களுக்கும் நியமனங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மேன்முறையீட்டை மேற்கொள்ளுமாறும் மேலதிகமாக பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11