ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இலங்கையின் புதிய அரசாங்கம்

Published By: Digital Desk 3

22 Aug, 2020 | 05:17 PM
image

(செய்திப்பிரிவு)

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவம், மனித உரிமை மீறல்கள், காணாமலாக்கப்பட்டோர், காணி அபகரிப்பு, அரச ஊழல் மற்றும் ராஜபக்ஷ குடும்பம் போன்ற விடயங்கள் தொடர்பில் செய்திகளை வெளியிடுவது ஆபத்தானதாக மாறியிருப்பதாகவும் பிரபல வெளிநாட்டு ஊடகமொன்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

'வைஸ்' என்ற பிரபல இணைய ஊடகத்தில் 'நாட்டைவிட்டு ஊடகவியலாளர்களை வெளியேற்றும் இலங்கையின் அரசாங்கம்' என்ற தலைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் கட்டுரையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது.

அக்கட்டுரையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் விடயங்கள் வருமாறு,

இறுதிக்கட்டப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டுத் தப்பிச்சென்ற லோகேசன் அப்புத்துரை, இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கான உயிரச்சுறுத்தல் தற்போது மேலும் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 'ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் ஒவ்வொருவரினதும் பெயர்களை என்னால் கூறமுடியாது. ஆனால் முன்னரை விடவும் இலங்கையில் ஊடகவியலாளராக இருப்பதென்பது தற்போது மிகவும் ஆபத்தானதாக மாறியிருக்கிறது' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

2009 ஆம் ஆண்டில் போர் முடிவடைந்த பின்னர் அப்போது பதவியிலிருந்த தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகிவந்ததாக ஊடகவியலாளர்கள் பலரும் 'வைஸ்' செய்திச்சேவைக்குக் கூறியிருக்கின்றனர். அண்மையில் வெளியான உலக ஊடக சுதந்திரச்சுட்டெண்ணின்படி 180 நாடுகளில் இலங்கை 127 ஆவது இடத்திலிருக்கின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஊடகவியலாளர்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளை ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு  அறிக்கைப்படுத்தியிருக்கிறது. இராணுவம், மனித உரிமை மீறல்கள், காணாமலாக்கப்பட்டோர், காணி அபகரிப்பு, அரச ஊழல் மற்றும் ராஜபக்ஷ குடும்பம் போன்ற விடயங்கள் தொடர்பில் செய்திகளை வெளியிடுவது ஆபத்தானதாக மாறியிருப்பதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஊடகவியலாளர்கள் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் அவர்கள் மீதான அடக்குமுறைகளின் காரணமாக தமது செய்திகளை சுயதணிக்கை செய்யவேண்டிய நிலைக்கு அவர்கள் ஆளாகியிருப்பதாகவும் கூறியிருக்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஆசியப் பிராந்திய ஆய்வாளர் அலியா இப்திகார், ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு உடலியல் ரீதியான தாக்குதல்களையும் உயிரச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இம்மாத ஆரம்பத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம், எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 10 மனித உரிமை அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகளை அச்சுறுத்தும் விதமாக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தன. அதேவேளை 2019 நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததிலிருந்து நாட்டைவிட்டுச் சென்ற இரு ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு ஆவணப்படுத்தியிருக்கிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டில் இலங்கையை விட்டுச்சென்ற பாஷன அபேவர்தன என்ற ஊடகவியலாளர் 2006 - 2011 வரையான காலப்பகுதியில் குறைந்தபட்சம் 70 ஊடகவியலாளர்களேனும் இலங்கையைவிட்டுத் தப்பிச்சென்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். 'இலங்கையிலிருந்து நீங்கள் செய்திகளை வெளியிட விரும்பினால் உங்களுக்கு இரண்டு தெரிவுகள் மாத்திரமே இருக்கின்றன. முதலாவது உரிய எல்லைக்கோடுகளுக்குள் நின்று செய்திகளை வழங்கவேண்டும். இரண்டாவது நீங்கள் விரும்பியதைச் செய்யும் அதேவேளை, அதற்கான விலையையும் செலுத்தத் தயாராக இருக்கவேண்டும். அவ்வாறு செய்து பாதிக்கப்பட்ட பலர் இருக்கின்றார்கள்' என்று அபேவர்தன எச்சரித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38