அரச நிறுவனங்களில் 126 நிறுவனங்கள் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் கீழே உள்ளது - மனுஷ நாணயக்கார

Published By: Digital Desk 3

22 Aug, 2020 | 12:17 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி கோத்தாபய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு கீழ் வருகின்ற 434 அரச நிறுவனங்களில் 126 நிறுவனங்கள் ராஜபக்ஷ  குடும்ப உறுப்பினர்களின் நிர்வாகத்தின் கீழே கொண்டுவரப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார  சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க பிரகடனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில்  உள்ள விடயங்களை அரசாங்கம்  உண்மையில் நிறைவேற்றுவார்களா என்பது தொடர்பில் எனக்கு சந்தேகமே உள்ளது. இவர்கள் ஆட்சிக்கு  வந்தவுடனேயே கோட்டையில் 20 ஏக்கர் நிலத்தை விற்றனர். அத்துடன் நிறுவனமொன்றுக்கு மொனராகலை பகுதியில் காணிகள் விற்கப்பட்டன.

அதேபோன்று ஒரே நாடு ஒரே சட்டம் என கூறுகின்றனர். ஆனால் குருநாகல் நகர மேயர் தொல்பொருள் இடமொன்றை இடித்த போது அவர் மீது கை வைக்க இடமளிக்க மாட்டோம் என்றனர். அதேபோல் அரச சேவைக்கு செல்லும் போது பொலிஸ் அறிக்கையை கேட்பதுடன் வழக்குகள் இருக்கின்றனவா எனவும் பார்க்கின்றனர். ஆனால் இந்த பாராளுமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட  ஒருவரும் , நீதிமன்றத்தில் குற்றவாளியாக 5 வருடங்களாக சிறையில் இருப்பவரும் உள்ளார். சட்ட மா அதிபர் தனக்கு வேலைகளை செய்ய இடமளிக்கின்றார் இல்லையெனவும் கூறுகிறார்.

இவர்களின் சேவைகள் நாட்டுக்காகவா அல்லது குடும்பத்திற்காகவா என்று பார்க்கும் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ , பிரதமர் மஹிந்த  ராஜபக்‌ஷ அமைச்சர்களாக சமல் ராஜபக்‌ஷ , நாமல் ராஜபக்‌ஷ என்ற இருவர் , அத்துடன் இராஜாங்க அமைச்சராக சசிந்திர ராஜபக்ஷ மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நிபுண  என ஒரு வலையமைப்பு உருவாக்கியுள்ளனர்.

அதுமட்டுமல்ல பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் 3 அமைச்சுகள் , கோத்தாபய ராஜபக்‌ஷவின் கீழ் 23 நிறுவனங்கள் , சமல் ராஜபக்‌ஷவின் கீழ் 17 நிறுவனங்கள் ,  பிரதமர் வகிக்கும் அமைச்சு பதவிகளின்  76 நிறுவனங்களும் , நாமல் ராஜபக‌ஷவின் கீழ் 7 நிறுவனங்களும் , சசிந்திர ராஜபக்‌ஷவின் கீழ் 6 நிறுவனங்களும் உள்ளன. அதேபோன்று அமைச்சு பெயர் குறிப்பிடப்படாத முக்கிய 7 நிறுவனங்கள் பஸில் தலைமையிலான கொவிட் கட்டுப்பாட்டு பிரிவின் கீழ் இருக்கின்றது.  இதன்படி  126  நிறுவனங்கள் ராஜபக்‌ஷ குடும்பத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. 434 நிறுவனங்களில் 126 நிறுவனங்கள் அதாவது 26 வீதமான நிறுவனங்கள் ராஜபக்ஷ சகோதரர்கள் குழுமத்தின் கீழே இயங்குகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58