வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக ஆளும் எதிர்க்கட்சிக்கிடையில் சபையில் வாக்குவாதம்

Published By: Digital Desk 3

22 Aug, 2020 | 12:19 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

வேலையற்ற பட்டதாரிகளில் 60 ஆயிரம் பேருக்கு தொழில் வழங்கப்போவதாக ஜனாதிபதி கொள்கை பிரகடன உரையில் தெரிவித்தபோதும், அவரது உரை அடங்கியிருக்கும் அச்சுப்பதிவில் 50 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சபையில் கேள்வி எழுப்பியபோது சபையில் ஆளும் எதிர்க்கட்சிக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான அடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் நிலையியற் கட்டளை 27, 2 இன் கீழ் வேளையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக சஜித் பிரேமதாச பல கேள்விகளை சபைக்கு முன்வைத்தார்.

இதன்போது குறிப்பாக வேளையற்ற பட்டதாரிகளில் தகுதிபெற்ற 60ஆயிரம் பேறுக்கு தொழில் நியமனம் வழங்குவதாக  ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தெரிவித்தார். ஆனால் அவரது உரையடங்கிய அச்சிப்பதிவில் 50 ஆயிரம் வேளையற்ற பட்டதாரிகள் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மையை சபைக்கு தெளிவுபடுத்தவேண்டும். 

அதேபோன்று தேர்தலுக்கு முன்னர் பட்டதாரிகளிடம் விண்ணப்பம்கோரி அவர்களில் அதிகமானவர்களுக்கு பயிற்சிக்கான  நியமனக்கடிதம் தபால் இடப்பற்றிருந்தன. தேர்தலுக்கு பின்னர் மீண்டும் கடந்த 17 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் வெளியிடப்பட்டிருப்பதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தன.  ஆனால் அதில் தேர்தலுக்கு முன்னர் தெரிவுசெய்யப்பட்டு பயிற்சிக்காக கடிதம் பெற்றவர்களில் அதிகமானவர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று விண்ணப்பப்படிவத்தில் பட்டதாரிகளின் பட்டச்சான்றிதழை இணைக்காததாலும் அவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் இதுதொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதன்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் எழுந்த சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ்குணவர்த்தன தெரிவிக்கையில்,

வேளையற்ற பட்டதாரிகளிடமிருந்து 91 ஆயிரத்தி 764 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. அதில் 59 ஆயிரத்தி 556 பேர் தகுதிபெற்று தெரிவாகி இருக்கின்றனர். அவர்களில் 45ஆயிரத்தி 869 பேருக்கு பயிற்சிக்காக கடிதம் அனுப்பப்பட்டிருந்த வேளையில் தேர்தல் காரணமாக அது நிறுத்தப்பட்டிருந்தன. அதில் தற்போது 6 ஆயிரத்தி 187பேர் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் என இணங்காணப்பட்டுள்ளனர். என்றாலும் இவர்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து 60 ஆரயிரம் பட்டதாரிகளை அரசாங்க தொழிலுக்கு இணைத்துக்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன் விண்ணப்பதாரிகளில் பெயர் நிராகரிக்கப்பட்டவர்கள் அவர்களின் நிலைமையை தெரிவித்து மேன்முறையீடு செய்யலாம் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அதனால் அவர்கள் மேன்முறையீடு செய்தால் அதுதொடர்பாக ஆராயப்படும் என்றார். 

இதன்போது எழுந்த எதிரக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பட்டதாரிகள் 50 ஆயிரமா 60 ஆயிரமா என சபைக்கு தெரிவிக்கவேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.

அதற்கு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் அனுமதிபெற்ற அரச, தனியார் பல்கலைக்கழக பட்டதாரிகள் அனைவருக்கும் தாெழில் வழங்க நடவடிக்கை எடுப்போம். நீங்கள் 20 ஆயிரம் பேருக்கேனும் தொழில் வழங்கவில்லை. அதனால் ஜனாதிபதி பட்டதாரிகளை ஏமாற்றமாட்டார். தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்த கோபத்தில் தற்போது பட்டதாரிகளின் விடயத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்றீகள்.

இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பி சத்தமிட்டபோதும் சபாநாயகர் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37