பிள்ளையார் சிலை உடைத்து தகர்ப்பு : புத்தர் சிலையை நிறுவ ஏற்பாடு : நிலாவெளியில் தொடரும் பதற்றம் : சிலைகளை உடைத்ததில் மர்மம்

Published By: MD.Lucias

12 Jul, 2016 | 04:47 PM
image

திருகோணமலை  நிலாவெளி பிரதான வீதியில் உள்ள  சாம்பல்தீவுச் சந்தியில் படையினரின் சோதனை சாவடிகள்  இருந்த பகுதியில், மீண்டும் புத்தர் சிலை நிறுவப்பட்டதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தினால், அப்பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 திருகோணமலையிருந்து சாம்பல் தீவிற்கு  திரும்பும், நிலாவெளி வீதியிலுள்ள  சந்தியில் தனியார் காணியில் பல ஆண்டுகளாக  காணப்பட்ட  சோதனைச் சாவடியை இராணுவத்தினர் அண்மையில் அகற்றியிருந்தனர். 

 இச்சாவடியில் கண்காணிப்பு கடமைக்காக ஐந்தாறு இராணுவத்தினர் மற்றும் இராணுவ பொலிசார் இருவர் கடமையில் இருந்து வந்தனர். 

யுத்தகாலத்தில் முற்றிலும் தமிழ் மக்கள் வாழும் பாரம்பரிய இடமான இப்பகுதியில் மக்களை சோதனையிட இந்நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நலையில் அநாவசியமான வகையில் இருந்த அந்த சோதனை சாவடியை படையினர் மூடி யிருந்ததுடன் அவ்விடத்தில் தாங்கள் வழிபட வைத்திருந்த மிகச்சிறியளவிலான  புத்தர் சிலையையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். 

இந்நிலையில், சாம்பல்தீவுச் சந்தியில், புத்தர் சிலை  மற்றும் இராணுவம் அகற்றப்பட்டு வெறுமையாக இருந்த இடத்தில், பிள்ளையார் சிலை ஒன்றும், சூலம் ஒன்றும் கடந்த 8ஆம் திகதியன்று வைக்கப்பட்டதாகவும் அந்தச் சிலை, அன்றையதினமே, இனந்தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 மறுநாள் மீண்டும் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையும் உடைத்தெறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் பிள்ளையார்   சிலையை உடைப்பதற்கான சிங்கள மக்கள்  அல்லது பௌத்த மக்கள் இப்பிரதேசத்தில் இல்லாத நிலையில் இதனை உடைத்தவர்கள் எங்கிருந்து வந்தார்களென தெரியாது.  யார் இதனை உடைத்தார்களென தெரியாது என பிரதேச மக்கள் சந்தேகம் தெரித்தனர்.

 பிரசித்தி பெற்ற ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் ஆலயத்திற்கு அருகிலேயே  இந்த காவல் நிலயம் உள்ளது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (10) புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் படையினரால் நாட்டப்பட்டு வளர்ந்திருந்த  சிறிய அரசமரம் ஒன்றும் இனந்தெரியாதவர்களால் வெட்டி எறியப்பட்டது. 

இதையடுத்து நேற்று திங்கட்கிழமை (11)காலை, பௌத்த கொடிகளால் சாம்பல்தீவு சந்தி அலங்கரிக்கப்பட்டதுடன், அங்கு  வெளியிடங்களிலிருந்து வந்து ஒன்று கூடிய  சிங்களவர்களும் பௌத்த பிக்குகளும்  வழிபாடு நடத்தியதுடன், அவசர அவசரமாக புத்தர் சிலையையும் நிறுவினர்.  

இவ்விடயம் தொடர்பில், தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லையெனவும், புத்தர் சிலை நிறுவப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும் பொலிசார்  தெரிவித்துள்ளனர். 

எனினும், முன்னாயத்த நடவடிக்கையாக அப்பகுதியில் பொலிஸார் சிலரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தியுள்ளனர்.

 முற்றிலும்  தமிழர்களை உள்ளடக்கிய இப் பிரதேசத்தில் இவ்வாறு புத்தர் சிலையை வைப்பது சர்ச்சைக்குரிய செயல் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் பிரதேசங்களில் அடாத்தாக இராணுவத்தினர் கடமைக்காக பாவித்த இடங்களிலெல்லாம் பௌத்த சிலை வைக்கப்படுவது தொடர்பான குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் வரை சென்ற விடயமாகும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31