அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் வடபகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் நகரில் உள்ள பேரியன் உள் ளூர் நீதிமன்ற வளாகத்திலிருந்து விசாரணைக்காக  ஒரு கைதியினை சிறைக்கு கொண்ட செல்லும் போது திடீரென்று அங்கிருந்த பொலிஸின் துப்பாக்கியை பறித்து கண்மூடித்தனமாக சுட்டார்.

நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இரு  பொலிஸ்  அதிகாரிகள் பலியாகினர். 

அங்கிருந்த பேரியன் உள்ளூரின் தலைவர் குண்டு காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸார்கள்மீது திடீர் தாக்குதல் நடத்திய கைதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இச்சம்பவத்தில் பொதுமக்களில் சிலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.