ராஜபக்ஷக்களின் அடிமைகளாக இருக்கவே மக்கள் பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்துள்ளனர் - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: J.G.Stephan

21 Aug, 2020 | 05:30 PM
image

(செ.தேன்மொழி)

18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அடிமைகளாக்கப்பட்டிருந்த மக்களை, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தின் மூலம் சுதந்திரமாக செயற்படுவதற்கான வாய்ப்பை நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொடுத்திருந்தது.

மக்கள் அதனை புறக்கணித்து தங்களை மீண்டும் ராஜபக்ஷாக்களின் அடிமைகளாகவே வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் வகையிலேயே அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்துள்ளனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.



ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடன உரை எதிர்பார்ததைப் போன்று புதியதொன்றாக அமையாவில்லை.  வழமையாக கூறப்படும் விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை முறையாக கையாளுவதற்கான திட்டத்தை ஜனாதிபதி முன்வைப்பார் எதிர்பார்த்திருந்த போதிலும் அது தொடர்பில் அவர் எதனையும் கூறவில்லை.

கொள்கை பிரகடன உரையில் முதலாவதாகவே 19 ஆவது அரசியலமைப்பு திருத்ததை நீக்குவது தொடர்பிலேயே ஜனாதிபதி பேசினார். இந்த திருத்தத்தை நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்திருந்தாலும் அது தொடர்பில் மக்களினதும், துறைசார் நிபுணர்களினதும் கருத்துக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

முன்னர் சிறந்ததாக தோன்றிய 19 ஆவது திருத்தம் தற்போது சிக்கலானதாக மாறியதற்கான காரணம் என்ன என்று புரியாமல் உள்ளது. 20 ஆவது திருத்தம் என்ற போர்வையில் 18 இல் காணப்பட்ட அதே ஏற்பாடுகளை அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கின்றதா என்கின்ற சந்தேகம் எழுகிறது. மக்களும் இதற்கு ஆதரவளிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

18 இல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களை அடிமைகளாக வைத்திருக்க முயற்சித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் 19 ஐ கொண்டுவந்து அடிமைகளாக இருந்த மக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருந்தோம். தற்போது மக்கள் நாங்கள் வழங்கிய சுதந்திரத்தை புறக்கணித்து விட்டு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்து தாங்களை மீண்டும் அடிமையாகவே நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற நீதிமன்ற ஆக்கிரமிப்புகள் , ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் என்பன இடம்பெற்ற அந்த இருண்ட காலப்பகுதியை நோக்கியே நாம் மீண்டும் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 19 இல் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு நிறைவேற்று மற்றும் பாராளுமன்ற அதிகாரங்களை பெற்றுக் கொள்ள முடியாது என்ற ஏற்பாட்டை உள்ளடக்கியிருந்தோம்.

அதனால் பசில் ராஜபக்ஷ போன்றோரினால் பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்ற முடியாமல் இருந்தது. தற்போது 20 இல் அதனையும் இவர்கள் மாற்றியமைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

கேள்வி : 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதற்கு ஆதரவளித்த பலர் தற்போது ஆளும் தரப்பிலே இணைந்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன ?

பதில்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆளுந் தரப்பினருடன் இணைந்துள்ளார். அவர் மாத்திரமல்ல 19 ஐ கொண்டுவருவதற்கு ஆதரவளித்தவர்கள் சு.க. மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் 19 இற்கு ஆதரவளித்து தற்போது அதனை எதிர்க்கின்றனர்.

நாட்டு மக்களும் இதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் பொறுப்பு வாய்ந்த மற்றும் மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட எதிர்கட்சி என்ற வகையில் அதில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். அதனாலேயே இது தொடர்பில் நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம்.

கேள்வி : 19 ஐ நீக்கினால் தானே இந்த பிரச்சினை ஏற்படும். அரசாங்கம் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பிலேயே பேசி வருகின்றது. அதில் சிக்கல் இல்லைதானே?

பதில்: புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 19 ஐ விட உயர் நிலையிலான ஜனாநாயக பண்புகளை உள்ளடக்கிய அரசியலமைப்பே மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். அதனை விடுத்து 18 இல் காணப்பட்ட அதே ஏற்பாடுகளை இதில் உள்ளடக்க கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44