'பொம்மை' படத்தின் பாடல்கள், டிரைலர் விரைவில் வெளியீடு.

Published By: Digital Desk 4

21 Aug, 2020 | 02:14 PM
image

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'பொம்மை' படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று  இப்படத்தின் நாயகனான எஸ் ஜே சூர்யா தெரிவித்திருக்கிறார்.

'மான்ஸ்டர்' என்ற படத்திற்கு பிறகு நடிகரும், இயக்குனருமான எஸ். ஜே. சூர்யாவிற்கு குடும்ப ரசிகர்கள்  அதிகமாகியிருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் நடிகை ப்ரியா பவானி சங்கர் ஜோடி மீண்டும் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் தயாராகும் 'பொம்மை' என்ற படத்தில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனாவிற்கு முன்பே நிறைவடைந்தது. தற்போது பின்னணி இசை சேர்க்கும் பணிகளும் நிறைவு பெற்றிருக்கிறது.

இதைத் தொடர்ந்து படத்தின் அப்டேட் குறித்து நடிகரும், இயக்குனருமான எஸ் ஜே சூர்யா தன்னுடைய டுவிட்டரில்,'' பின்னணி இசையின் ராஜா, இளம் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா, 'பொம்மை' படத்திற்கான பின்னணி இசை பணியை நிறைவு செய்திருக்கிறார். நானும், நடிகை பிரியா பவானி சங்கரும் நடித்திருக்கும் இந்த காதல் திரில்லர் திரைப்படத்திற்கு, இயக்குனர் ராதாமோகன் அமைத்திருக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு, யுவனின் உயிரோட்டமுள்ள பின்னணி இசை கூடுதல் மதிப்பை அளித்திருக்கிறது. தற்போது இறுதிவடிவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துடன் உங்களைச் சந்திக்கிறோம்.' என்று பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே 'பொம்மை' திரைப்படம், பிரபலமான டிஜிற்றல் தளத்தில் அடுத்த மாத இறுதியில் வெளியாக கூடும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35