கமலா ஹரிஸினால் வைரலாகிய 'சித்தி' என்ற தமிழ் வார்த்தை

Published By: Digital Desk 3

21 Aug, 2020 | 01:31 PM
image

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் பெண் கமலா ஹரிஸ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தேர்தலுக்கான பிரச்சார உரையில், குடும்பங்களின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.

"என்னுடைய கணவர், அவருடைய குழந்தைகள், என்னுடைய குடும்பம். என்னுடைய சகோதரி அவருடைய மகளும் என்னுடைய குடும்பம். அதுபோல் இந்தியாவில் உள்ள என்னுடைய உறவினர்கள் குறிப்பாக என்னுடைய சித்தியும் என்னுடைய குடும்பம். குடும்பம் என்பது நம்முடைய வாழ்க்கையின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதையும் தாண்டி இந்த உலகத்தையும் பார்க்க வேண்டும்.வாழ்க்கையை நடத்த போராடும் மக்களிடம் அன்பு செலுத்த வேண்டும். பொது சேவையே மிகவும் உயர்ந்தது என்று என்னுடைய தாய் கற்றுத் தந்தார். " என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் இணைய மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அதிகாரபூர்வ வேட்பாளராக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டார். 

இந்நிலையில், மாநாட்டின் இரண்டாவது நாளில் தனது உரையில் கமலா கரிஸ் தமிழில் 'சித்தி' என்று குறிப்பிட்டது, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் குறிப்பாக, தமிழர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த வார்த்தை குறித்து பலரும் சமூக வலைதளங்களில் உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளைப் பதிவு செய்து வருவதைப்பார்த்த அமெரிக்கர்கள் உள்ளிட்ட பலரும், தற்போது 'சித்தி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதை இணையதளத்தில் தேடி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

காணொளி பார்வையிட: https://youtu.be/zeBeaSvMH0w

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59