டி.ஐ.ஜி.யின் மகள் செலுத்திய காரை நிறுத்தியமை, தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் மறுப்பு ; விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவு

21 Aug, 2020 | 06:52 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மகள் செலுத்திச் சென்ற காரை, போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் நிறுத்தியமைக்காக, கொட்டாவ பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அந்த பொலிஸ் நிலையத்தின் நுழை வாயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

 கடந்த ஜூலை 15 ஆம் திகதி இரவு, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில்  குடிபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்யும் விஷேட சுற்றி வலைப்பொன்று மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த சுற்றி வளைப்பில் குறித்த உப பொலிஸ் பரிசோதகரும் பங்கேற்றுள்ள நிலையில்,  அன்றைய தினம் இரவு, இரட்டை கோட்டினை ஊடறுத்து வாகனம் செலுத்தியமைக்காக கார் ஒன்றினை குறித்த உப பொலிஸ் பரிசோதகர் நிறுத்தியுள்ளார்.

 இதன்போது, காருக்கு அருகே சென்ற போது, காரில் இருந்த பெண் காருக்குள் உள்ள மின் விளக்கை அணைத்துள்ளார்.

 இதன்போது,  அப்பெண்ணின் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை குறித்த  உப பொலிஸ் பரிசோதகர் கோரியுள்ள போது, ' நான் டி.ஐ.ஜி.யின் மகள். என்னை நிறுத்த நீ யார்' என கடும் தொனியில் கேட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார்.

 இது தொடர்பில் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

மறு நாள், பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் அலுவலகத்துக்கு குறித்த உப பொலிஸ் பரிசோதகர் அழைக்கப்பட்டுள்ளார்.

அங்கு ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபரும் அவரது மகளும் இருந்துள்ளதுடன், அவர்கள் முன்னிலையில் பிரதேசத்தின் உயர் அதிகாரி உப பொலிஸ் பரிசோதகரை மிகக் கேவலமாக ஏசியதாக, அந்த உப பொலிஸ் பரிசோதகர் தனது சக அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

 

அந்த உப பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் இட்ட பூரணமான பதிவைக் கண்டுகொள்ளாத  உயர் அதிகாரி,  ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சொல்லை மட்டும் கேட்டு செயற்பட்டுள்ளதாக அறிய முடிகின்ரது.

அதன்படியே கடந்த  ஜூலை 16 ஆம் திகதி முதல் அந்த உப பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நுழை வாயிலில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு கடந்த பொதுத் தேர்தலில் வக்களிக்க செல்லவும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

 இவ்வாறான பின்னணியிலேயே இது குறித்து விசாரிக்க பதில் பொலிஸ் மா அதிபர்,மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27