அரசின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட 113 பேரின் விண்ணப்பங்கள்

Published By: Digital Desk 4

20 Aug, 2020 | 05:30 PM
image

அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று கல்விகற்று பட்டம்பெற்ற 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நிராகரிப்பு ~ Theebam.com

அண்மையில் அரச வேலைவாய்ப்பிற்காக தெரிவுசெய்யப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளிற்கான பெயர்பட்டியல் அரசினால் வெளியிடப்பட்டிருந்ததுடன், நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளின் விபரங்களும் அதற்கான காரணங்களும் வெளியிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் இலங்கை போரின் போது இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்று அங்குள்ள பல்கலை கழகங்களில் படித்து பட்டம் பெற்று மீண்டும் நாடு திரும்பியவர்களின் விண்ணப்பங்களும் குறித்த பட்டியலில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் 27, வவுனியா 18, யாழ்ப்பாணம் 66, முல்லைத்தீவில் 2 பேருமாக மொத்தம் 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பட்டம் என்ற காரணத்தை முன்வைத்தே அவர்களிற்கான தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன். பல்வேறு பாதிப்புகளை சந்தித்து அகதிகளாக சென்று கஸ்டத்தின் மத்தியில் படித்து பட்டம் முடித்து தாய் நாடு திரும்பிய நிலையிலும் தமது தொழில் வாய்ப்பு தட்டிக்களிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50