புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாழ்த்துச் செய்தியில் முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ள முன்னாள் சபாநாயகர்...!

Published By: J.G.Stephan

20 Aug, 2020 | 12:27 PM
image

(நா.தனுஜா)
நாட்டின் ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் முதன் முறையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவானவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே தற்போது ஒரு உறுதியான அரசாங்கத்திற்கு அவசியமான பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி இருக்கின்ற அதேவேளை, புத்தாக்கமும் நடைபெறுகின்றது. இவற்றைக்கொண்டு நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.

2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலையடுத்துத் தெரிவான புதிய பாராளுமன்றம் முதலாவதாக இன்று வியாழக்கிழமை சம்பிரதாய நிகழ்வுகளுடன் கூடியது. இந்தப் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ  தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதன் கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்திருப்பதுடன், இம்முறை பல புதிய வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கூறும் வகையிலும், பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் நாட்டிற்கு நன்மையளிக்கும் விதமாக அமையவேண்டும் என்று வலியுறுத்தியும் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

நாட்டின் ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்றைய தினம் ஆரம்பமாகும் நிலையில், ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் நாட்டின் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கரு ஜயசூரிய தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38