அம்பேவெல தமது புதிய வர்த்தக நாம தூதுவராக – Mrs. World 2020 கரோலின் ஜுரியை நியமித்துள்ளது!

19 Aug, 2020 | 11:44 PM
image

2020 ஆம் ஆண்டின் Mrs. World உலக அழகிப் பட்டத்தை வென்ற கரோலின் ஜுரியை தமது உத்தியோகபூர்வ வர்த்தக நாமத் தூதுவராக நியமித்துள்ளதாக அம்பேவெல அறிவித்துள்ளது. இலங்கையின் நம்பிக்கையை வென்ற உயர் தரம் மற்றும் போஷாக்கு நிறைந்த பாலுற்பத்திகளை விநியோகிக்கும் அம்பேவெல, கரோலின் ஜுரியுடன் ஏற்படுத்தியுள்ள இந்தப் பங்காண்மை இயற்கையாகவே மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.

அம்பேவெல தனது பரந்தளவு உயர் தரம் வாய்ந்த பாலுற்பத்திகளில் பசுப் பால், கொழுப்பற்ற பால், சுவையூட்டப்பட்ட பால், யோகட், பட்டர் மற்றும் சீஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தொடர்ச்சியாக இலங்கையர்களுக்கு போஷாக்கும் சுவையும் நிறைந்த பாலுற்பத்திகளை 16 வருடங்களுக்கு மேலாக வழங்கி வருகின்றது. உள்நாட்டு வர்த்தக நாமம் எனும் வகையில், உயர் தரத்துக்கு அதிகளவு அர்ப்பணிப்பை வழங்கி, அம்பேவெல சந்தையில் உயர்ந்த ஸ்தானத்திலும் சிறப்புக்கான அடையாளமாகவும் திகழ்கின்றது.

உலகளாவிய ரீதியில் இலங்கையின் கீர்த்தி நாமத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றதில் கரோலின் ஜுரிக்கு முக்கிய பங்கு உண்டு. வலுவூட்டப்பட்ட நவீன காலத்துப் பெண்ணுக்கான அடையாளமாக இவர் திகழ்வதுடன், ஒரு தாய், மனைவி மற்றும் தொழில்முயற்சியாளராகவும் திகழ்கின்றார். இவரைப் போன்ற பெண்களுக்கு வலுவூட்ட அம்பேவெல பால் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உதவியளிப்பதுடன்,குடும்பத்தாருக்கு சிறந்த போஷாக்கை பெற்றுக் கொடுக்க பங்களிப்பு வழங்குகின்றது.

அம்பேவெல முன்னெடுக்கும் புதிய பிரச்சாரத் திட்டங்களில் கரோலின் தூதுவராக பங்கேற்றுவர்த்தக நாமத்துக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளார். அம்பேவெல வர்த்தக நாமத் தூதுவராக நியமனம் பெற்றமை தொடர்பில் கரோலின் ஜுரி கருத்துத் தெரிவிக்கையில், “அதிகளவு நம்பிக்கையை வென்ற உள்நாட்டு வர்த்தக நாமம் எனும் வகையில் அம்பேவெல எமது குடும்பத்தின் அத்தியாவசிய அங்கமாக ஆரம்பம் முதலே அமைந்துள்ளது. சிறந்த போஷாக்கு மற்றும் நலச் செழுமை காரணமாக, எனது தாயார் அம்பேவெல தயாரிப்புகளின் மீது அதிகளவு ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். எனது பிள்ளைகளுக்கும் இதே பாரம் பரியத்தை நான் தொடர்கின்றேன்  சிறப்புக்கான அம்பேவெலவின் உறுதி செய்யப்பட்ட அர்ப்பணிப்பின் காரணமாக, எனக்கு இந்த நாமத்துடன் கைகோர்க்கக் கிடைத்தமை சிறந்த கௌரவமாகக் கருதுகின்றேன்.” என்றார்.

2020 ஆம் ஆண்டின் Mrs. World 2020 உலக அழகிப் பட்டம் அடங்கலாக கரோலின் லூசி ஆன் ஜுரி, பல அழகுராணிப் பட்டங்களை வென்றுள்ளார். 2019 டிசம்பர் 7 ஆம ; திகதி அமெரிக்காவின்லாஸ் வெகாஸ் - நிவாடா பகுதியில் இடம்பெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் இலங்கை சார்பாக ஜுரி பங்கேற்று வெற்றிப் பெற்றியிருந்தார்.

புதிய வர்த்தக நாமத் தூதுவர் நியமனம் தொடர்பாக லங்கா மில்க் ஃபுடட்ஸ் பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி மஞ்சுள தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் இரு அடையாளங்களுக் கிடையிலான இந்த கைகோர்ப்பு என்பது, தாய்மை மற்றும் பால் ஆகியவற்றுக் கிடையிலான உறுதியான பிணைப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

அம்பேவெல எப்போதும் உயர் தரம் வாய்ந்த பாலுற்பத்திகளை தயாரிப்பதில் கவனம ; செலுத்துகின்றது. உலகின் சிறந்த பாற்பண்ணைச் செயற்பாடுகளினூடாக நாம் இதை உறுதி செய்கின்றோம். நிலைபேறான பண்ணைச் செய்கை மற்றும் சிறந்த விலங்கு பராமரிப்பு செயற்பாடுகள் போன்றன இதில் அடங்கியுள்ளன. அம்பேவெல பண்ணை என்பது தூய, பசுமையான பகுதியாகும். தரம் பசுமை மற்றும் போஷாக்கை உறுதி செய்ய இது ஏதுவாக அமைந்துள்ளது.” என்றார்.

2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதல் அம்பேவெல நாட்டின் நுகர்வோருக்கு உயர் தரம் வாய்ந்த பாலுற்பத்திகளை தயாரித்து வழங்கி வருகின்றது. உள்நாட்டு பாற்பண்ணைத் துறையை அபிவிருத்தி செய்து வளர்ச்சியடைவதற்கு வர்த்தக நாமம் உதவியுள்ளது. உள்நாட்டு சமூகங்களுக்கு வலுவூட்டியுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத்தையும் வலிமைப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு பாற்பண்ணைத்துறையில் தங்கியிருப்பது என்பது, தன்னிறைவை ஊக்குவித்து, செலவு கூடிய இறக்குமதியை குறைத்துக் கொள்ளவும்  பங்களிப்பு வழங்கியுள்ளது. உலகின் சிறந்த பாலுற்பத்திகள் விநியோகத்தர்களில் ஒன்றாக திகழ்வதை நோக்கி அம்பேவெல செயலாற்றி வருகின்றது. அதற்காக நவீன தொழில்நுட்பம் சிறந்த செயன் முறைகள் மற்றும் உயர் தரங்களைபேணிய வண்ணமுள்ளது.

படம் 1:

கரோலின் ஜுரி (Mrs. World 2020) தமது கணவர் நிஷாந்த தீபால் (இடம ;) புரிந்துணர்வு உடன்படிக்கையை, ஸ்டஷானி ஜயவர்தன (பணிப்பாளர் - லங்கா மில்க் ஃபுட்ஸ் பிஎல்சி), லங்கா மில்க் ஃபுட்ஸ் பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி மஞ்சுள தஹநாயக்க, லங்காமில்க் ஃபுட்ஸ் பிஎல்சி ஊக்குவிப்புகள் பொது உறவுகள் முகாமையாளர் வருண மதுசங்க, லங்கா மில்க் ஃபுட்ஸ் பிஎல்சி கம்பனி செயலாளரும் சட்ட அதிகாரியுமான ஹேமந்தி கே புலத்வத்த ஆகியோர் காணப்படுகின்றனர்.

படம் 2:

அம்பேவெல புதிய வர்த்தக நாம தூதுவர் கரோலின் ஜுரி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58