ரணில் பாராளுமன்றத்திற்கு செல்வதே சிறப்பு - ஜே.சி.அலவத்துவல

Published By: Digital Desk 3

19 Aug, 2020 | 05:12 PM
image

(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியலுக்கும் அவர்களால் ஒருவரைக்கூட நியமிக்க முடியாமல் போயுள்ளது.  அந்த கட்சிக்குள் தொடரும் முரண்பாடுகளே இதற்கு பிரதான காரணம்  என பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தேசியப்பட்டியல் ஆசனத்தில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் வருவதே சிறந்த விடயமாகும். மேலும் ஐ.தே.க எம்முடன் இணைந்து செயற்பட விரும்பினால் அதற்கும் தயாராகவே உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்  கூறியதாவது,

வரலாற்றில் முதல் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூட இல்லாமல் இம்முறை பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஐ.தே.க.வின் முன்னாள் உறுப்பினர் என்ற வகையில் கவலைக் கொள்கின்றேன். ஆனால், தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் ஐ.தே.க.வுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கும் ஒருவரைக்கூட நியமிக்க முடியாமல் உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடளாவிய ரீதியில் கிடைக்கப் பெற்ற வாக்குகளுக்கமையவே தேசியப்பட்டியலில் ஒருவர் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் அந்த பட்டியலில் கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்கவின் பெயரே உள்ளடக்கப்பட வேண்டும் . அந்த கட்சியில் தற்போது இருப்பவர்களில் அவரே பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர்.

ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக் கொள்ளவோ , சிறிகொதாவை கைப்பற்றவோ தேர்தலில் போட்டியிடவில்லை.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கிலேயே தேர்தலில் போட்டியிட்டது. இந்நிலையில் சிறிகொத்தாவை கைப்பற்றுவது எமது எண்ணம் கிடையாது. ஐ.தே.க.வினர் எமது கட்சியுடன் இணைந்து செயற்ட விரும்பினால் அவர்களை இணைத்துக் கொண்டு எமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22