'அயல்நாட்டிற்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் கீழ் பிராந்திய ஒத்துழைப்பிலும் வெகுவாகக் கவனம் செலுத்துவோம்: வெளிவிவகார செயலாளர்

Published By: J.G.Stephan

19 Aug, 2020 | 04:30 PM
image

(நா.தனுஜா)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெளிநாடுகளுடனான உறவில் மாத்திரமன்றி 'அயல்நாட்டிற்கு முன்னுரிமை' என்ற அவரது கொள்கையின் கீழ் பிராந்திய ஒத்துழைப்பிலும் வெகுவாகக் கவனம் செலுத்தியிருக்கிறார். அந்தவகையில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிட முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, நாம் நீண்ட தூரம் பயணிப்பதற்கான திட்டமிடல்களை செய்யவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.  

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் தாரக பாலசூரிய தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் மூன்று முக்கிய கொள்கைகளாக தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டுறவு ஆகியவை காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சராக தாரக பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளமையானது அவர்மீது ஜனாதிபதி கொண்டிருக்கும் நம்பிக்கையையே வெளிப்படுத்துகின்றது.

வெளிநாடுகளுடனான உறவில் மாத்திரமன்றி பிராந்திய ஒத்துழைப்பிலும் ஜனாதிபதி வெகுவாகக் கவனம் செலுத்தியிருக்கிறார். 'அயல்நாட்டிற்கு முன்னுரிமை' என்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கொள்கையின் கீழேயே பிராந்திய விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தெற்காசியப்பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் பொருளாதார ரீதியில் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. எனவே பொருளாதார நிபுணரான தாரக பாலசூரியவினால் அதனைச் சாத்தியமாக்க முடியும் என்று நம்புகின்றேன்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடம் மிகவும் தனித்துவமானதும் முக்கியமானதுமாகும். அதனடிப்படையில் உண்மையில் இலங்கை ஒரு சிறிய நாடல்ல. மிகுந்த பலத்தையுடைய நாடாகும். விசாலமானதாக சிந்திப்பதன் ஊடாகவே பெருமளவான விடயங்களை அடைந்துகொள்ள முடியும்.

அதேபோன்று இதுவரை காலமும் எமது நாடு இறக்குமதிகளில் பெருமளவிற்குத் தங்கியிருந்தது. எனினும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு இறக்குமதிகளின்றி எமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்குக் கற்றுக்கொண்டோம். எனவே கொவிட் - 19 எமது பொருளாதாரக்கொள்கையை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அதன்படி நாம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09