மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர்  டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (11) அறிவித்துள்ளார்.

எனினும் டி20 மற்றும்  ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளைாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லர் இதுவரையில் 130 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெய்லர் தனது 18 ஆவது வயதில் இலங்கை அணிக்கெதிராக தனது முதலாவது போட்டியில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமாகினார்.

இவருடைய டெஸ்ட்  இன்னிங்ஸ் ஒன்றின் சிறப்பான பந்துவீச்சுப் பதிவு என்றால் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 2015 ஆம் ஆண்டு 47 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டினை கைப்பற்றியமையை கூறமுடியும்.

இதேவேளை 2006 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான  டெஸ்ட் போட்டியொன்றில் 95 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுகளை கைப்பற்றியமை இவரது டெஸ்ட் போட்டியின்  சிறந்த பந்து வீச்சுப்பிரதியாகும்.

இவர் இறுதியாக அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் விளைாடியுள்ளதோடு இந்தியாவுடனான தொடரில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.