கொவிட் 19 விழிப்புணர்வுகளை கல்வியமைச்சுடன் இணைந்து வழங்கும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ்        

Published By: Digital Desk 3

19 Aug, 2020 | 02:52 PM
image

நாட்டின் முன்னணி காப்புறுதித்துறை நிறுவனமான ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ்  கல்வியமைச்சுடன் இணைந்து கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தல் மற்றம் தடுப்பது பற்றிய விழிப்புணர்வுகள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டது.

பாடசாலைகள் மற்றும் கல்வியகங்களிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஊழியர் குழாமினரது பங்களிப்பில் பாதுகாப்பு மிக்க பாடசாலை அமைப்பை கொண்டு நடாத்தும் நோக்கில் இவ்விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிடுவதோடு ‘சிறந்த பழக்கத்தால் சுகாதாரமான வாழ்வு’ என்ற தலைப்பின் கீழ்  வழிக்காட்டல்கள் அடங்கிய குறித்த வீடியோவானது சுகாதார பிரிவுகளின் ஆலோசனைகள் மற்றும் வழிக்காட்டல்களின் கீழ் கல்வியமைச்சினால் வெளியிடப்படும் ஆலோசனைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வீடியோவை வெளியிடும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு 2020 ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கல்வியமைச்சில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் கல்வியமைச்சு செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த , இராஜாங்க செயலாளர் ரஞ்சித் சந்ரசேகர, சுகாதார மற்றும் போசாக்கு தொடர்பான பணிப்பாளர் ரேணுகா பீரிஸ் மற்றும் ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ்        நிறுவன தலைவர் ஜகத் வெல்லவத்த ஆகியோர் கலந்து கொண்டனர். 

‘சிறந்த பழக்கத்தால் சுகாதாரமான வாழ்வு’ என்ற சுகாதார வழிக்காட்டல்கள்     அடங்கிய இந்த வீடியோவானது தற்பொழுது நாடு முழவதும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வீடியோவினை        ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸின் உத்தியோகப்பூர்வ you tube  அலைவரிசையிலும் முகப்புத்தகத்திலும் பார்வையிட முடியும்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பைப் பெற்றுத்தரும் முகமாக தேசிய காப்புறுதியாளன் என்றவகையில் ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ்        முன்னணியில் இருப்பதோடு கொவிட் தொற்றை தடுக்கும் வழிமுறைகளைக் கொண்ட இவ்வீடியோவை தயாரிப்பதற்கு பங்களிப்பு வழங்குவதன் மூலம் இலங்கையிலுள்ள பாடசாலைகள் மற்றும் மாணவர்களை பாதுகாப்பதற்கான மற்றுமொரு படிமுறையாக இது கருதப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57