ஆசிரி ஆய்வுகூடம் பெருமைக்குரிய மெரிட் விருதை வென்றது

Published By: Digital Desk 3

19 Aug, 2020 | 12:27 PM
image

இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருமைக்குரிய தேசிய தர விருதுகள் வழங்கும் நிகழ்வில், ஆசிரி ஆய்வுகூடம் பெருமைக்குரிய மெரிட் விருதை வென்றது.

சுகாதாரபராமரிப்புத் துறை – பாரிய பிரிவு என்பதன் கீழ் ஆசிரி ஆய்வுகூடம் இந்த விருதைப் பெற்றுக் கொண்டதுடன், இலங்கையில் முதன் முறையாக தனியார் மருத்துவ ஆய்வுகூடமொன்று இந்த விருதை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது. 

சிறப்பாக செயலாற்றும் இலங்கையின் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வாக இலங்கை தேசிய தர விருதுகள் அமைந்துள்ளது. அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற மல்கம் பால்ரிட்ஜ் தேசிய தர விருதுகள் பொறிமுறையின் பிரகாரம் வெற்றியாளர்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டிருந்தனர். உலகளாவிய ரீதியில் காணப்படும் 80 க்கும் அதிகமான நாடுகளில் இந்த தர நிர்ணயங்கள் பேணப்படுவதுடன், சிறப்பாக செயலாற்றும் நிறுவனங்கள் இனங்காணப்பட்டு கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுக்காக தெரிவு செய்யும் மதிப்பாய்வு செயற்பாடுகளின் போது, ஆய்வுக்குட்படுத்தப்படும் நிறுவனத்தில் முறையாக தரச் செயற்பாடுகள் பின்பற்றப்படுகின்றமையை ஆராய்வதற்கான கள விஜயங்கள் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விருதைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர். மஞ்சுள கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பெருமைக்குரிய விருதை ஆசிரி ஆய்வுகூடம் பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். தேசத்துக்கு தொடர்ச்சியாக உயர் தரம் வாய்ந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

வைத்தியர் கருணாரட்ன மேலும் குறிப்பிடுகையில், “உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இனங்காணல் சாதனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி எமது ஆய்வுகூட மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்கின்றோம். துறைசார் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் எமது அணியில் காணப்படுவதுடன், சகல ஆய்வுகூட சாதனங்களும் முறையாக பேணப்படுவதையும், உயர் தரமான பெறுபேறுகளை பெற்றுக் கொடுப்பதையும் உறுதி செய்கின்றனர். அவர்களின் வலிமை மற்றும் அரப்பணிப்பையும் இந்த விருது மேலும் வெளிப்படுத்தியுள்ளது.” என்றார்.

குழும ஆய்வுகூட இயக்குனர் என். பி. ஜோன் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டின் கௌரவிப்பினூடாக, நிறுவனத்தின் ஒப்பற்ற களச் செயற்பாடு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் தேசிய தர விருதுகள் வழங்கும் நிகழ்வில் அதி உயர் விருதை பெற்றுக் கொள்வது எமது இலக்காகும்.” என்றார்.

மேலும் இந்த ஆய்வுகூடத்துக்கு கிடைத்துள்ள உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இதர குறிப்பிடத்தக்க தரச் சான்றிதழ்களில் ISO 15189:2012, ISO 9001: 2015 மற்றும் ISO 14001: 2015 ஆகியன அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58