அமெரிக்க தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடன் - வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

Published By: Digital Desk 3

19 Aug, 2020 | 12:27 PM
image

அமெரிக்க தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட ஜோ பைடனை, ஜனநாயக கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2 ஆவது முறையாக போட்டியிடுகிறார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் ஜனாதிபதி பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

இதுகுறித்து ஜோ பைடன் தனது டுவிட்டரில்,

“அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை” என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யும் கட்சி மாநாடு  இணையத்தில் நடைபெற்றது.

இதில் ஜோ பைடன் உத்தியோகபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17