நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்பது தெளிவாக தெரிகின்றது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (11) கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்கு பார்வையிட வந்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முசமில் இன்னும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இப்பொழுது நாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இப்படியே அடுத்தடுத்து கைதுகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கும். ஏனென்றால் இது முற்றிலும் அரசியல் பழிவாங்கல்.

அரசாங்கம் நீதியை நிலைநாட்ட இவ்வாறு செய்வதாக கூறுகிறது. ஆனால் ஒருதரப்பினருக்கு மட்டும் நீதியை செயற்படுத்தக்கூடாது. எல்லா தரப்பினருக்கும் சமமாக நீதி கிடைக்க வேண்டும் என்றார்.